இளம் வயதில் தந்தையின் சொல் கசக்கும். ஆனால் தந்தை சொல்லை மந்திரம் என்று அப்பாவின் பேச்சை கேட்டு முன்னேறியவர்கள் தான் உண்டு. அதற்கு உதாரணமாக இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரும், வேதாந்த் பேஷன்ஸின் தலைவருமான ரவி மோடியை தைரியமாக சொல்லலாம்.
தந்தையின் ஒரே ஒரு அறிவுரை கேட்டதால் இன்று ரூ.27,660 கோடி நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார். மன்யவர், மோஹே, மந்தன், மெபாஸ் மற்றும் த்வாமேவ் போன்ற பல பிரபலமான பிராண்டுகளை வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.

மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பிறந்தவர் ரவி மோடி. இவரின் தந்தை ஜவுளிக்கடை நடத்தி வந்தார். தனது 13 வயதில் தந்தையின் ஜவுளி கடையில் விற்பனையாளராக தனது கேரியரை தொடங்கினார். இடையில் தந்தையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து அம்மாவிடம் வாங்கிய ரூ.10,000 பணத்தை மூலதனமான போட்டு தனியாக ஒரு கடையை தொடங்கினார். நல்ல வியாபாரமும் நடந்தது. 2002ம் ஆண்டில் 20களின் (வயது) மத்தியில், தனது வெற்றியை வெளிப்படுத்தும் நோக்கில் மெர்சிடிஸ் காரை வாங்க விரும்பினார்.
அந்த நேரத்தில், ரவி மோடியை அழைத்து அவர் தந்தை பேசினார். கார் வாங்க முடியுமா?, உன் தொழிலுக்கு மூலதனம் தேவைப்படும் என்றார். மேலும், வலி சில நாட்கள் இருக்கும் தாங்கி கொண்டால் வாழ்க்கை முழுவதும் ஓய்வெடுக்கலாம் அதேசமயம் சில நாட்கள் ஓய்வெடுத்தால் உன் வாழ்நாள் முழுவதும் வலி இருக்கும் என்று அறிவுரை வழங்கினார்.
தந்தையின் நல்ல ஆலோசனை அவரது மனதை மாற்றியது. மெர்சிடிஸ் கார் வாங்கும் முடிவை கை விட்டார். 2002ல் தனது ஒரே மகனின் பெயரில் வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனத்தை நிறுவினார்.
அவர் சந்தையில் ஆடைகள் தேவையில் ஒரு இடைவெளியை கண்டறிந்து, உற்பத்தி துறையில் நுழைய முடிவு செய்தார். உத்தர பிரதேசத்தில் ஒரு ஆலையை தொடங்கி சொந்த கலாச்சார ஆடை தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்தார். வேதாந்த் பேஷன்ஸை சந்தையில் முன்னணி நிறுவனமாக மாற்றினார்.
மன்யவர் என்பது நாடு முழுவதும் திருமண ஆடைகளுக்காக பெயர் பெற்றது. விராட் கோலி, அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் கார்த்திக் ஆர்யன் போன்ற பிரபலங்களின் விளம்பரங்களால் பிராண்டின் புகழ் பரவியது.
பணத்துக்கு துணிகளை விற்றதில் இருந்து மோடியின் நிறுவனம் 600 கடைகளுக்கு சொந்தக்காரராக வளர்ந்தது. ரவி மோடியின் மகன் வேதாந்த் தற்போது நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரியாக உள்ளார்.
இவரது மனைவி ஷில்பி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு உறுப்பினராக உள்ளார். ரவி மோடியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.27,390 கோடி. கோடீஸ்வராக இருந்தாலும் எளிமையாக வாழ்கிறார். கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டியில் வசிக்கிறார்.
கூச்சம் காரணமாக ஊடகங்களிடம் இருந்து விலகியே இருக்கிறார். கடந்த ஆண்டு வேதாந்த் பேஷன்ஸ் ஐ.பி.ஓ. வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற தனது நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்விலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
தற்போது வேதாந்த் பேஷன்ஸ் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.32,529 கோடியாக உள்ளது. ரவி மோடி, மெர்சிடிஸ் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை 15 ஆண்டுகளுக்கு பிறகு 2017ல் நிறைவேற்றினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications