டெல்லி: வரும் 31ஆம் தேதி உடன் நிதியாண்டு முடிவடைய இருப்பதால் நிதி சார்ந்த பல்வேறு பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மக்கள் உள்ளனர்.
அந்த வகையில் மார்ச் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டிய வரி சார்ந்த மற்றும் நிதி சார்ந்த பணிகள் என்னென்ன அபராதம் செலுத்தப்படுவதை தவிர்க்க என்னென்ன செய்ய என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..

சொத்து விற்பனை : அசையாத சொத்து விற்பனை தொடர்பாக பிப்ரவரி மாதத்தில் வருமான வரி சட்டத்தின் பிரிவு 194-IA இன் கீழ் பெற்ற வரி சலுகைக்கான சலான் மற்றும் அறிக்கையை சமர்பிக்க கடைசி நாள். அதே போல பிரிவுகள் 194-IB, 194M, 194S ஆகியவற்றின் கீழ் வரி சலுகை கோரியவர்களும் அதற்கான சலான் மற்றும் அறிக்கையை மார்ச் 30க்குள் சமர்பிக்க வேண்டும்.
வரி விலக்கு: நிதியாண்டு 2023-24இல் வரி விலக்குகளை கோருபவர்கள் அதற்கான முதலீடுகளை மார்ச்31க்குள் செய்திட வேண்டும்.எனவே நீங்கள் வரி சலுகைக்காக முதலீடு செய்ய வேண்டுமெனில் இன்னும் 11 நாட்களே இருக்கின்றன. 2021-22க்கான திருத்தப்பட்ட ஐடிஆர் தாக்கல் செய்ய மார்ச் 31 தான் கடைசி நாள். அதே போல 2019-20க்கான வருமான வரி ஆவணத்தை புதுப்பித்து தாக்கல் செய்பவர்களும் மார்ச் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம்: மூத்த குடிமக்களுக்கு என கொண்டு வரப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம். இந்த திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயரில் செய்யப்படும் முதலீட்டு 7.4% என வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் வரும் 31ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு இதன் முதலீட்டு காலம். இதில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு வட்டி கணக்கிட்டு 10 ஆண்டுகளுக்கு வருமானமாக திருப்பி அளிக்கப்படும். எல்ஐசி உடன் இணைந்து அரசு இதனை செயல்படுத்தி வருகிறது.
ஃபாஸ்டேக் கேஒய்சி: ஃபாஸ்டேக் வாடிக்கையாளர் தங்களது கேஒய்சி-யை அப்டேட் செய்வதற்கு மார்ச் 31 தான் கடைசி நாளாகும்.பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை அடுத்து அதில் ஃபாஸ்டேக் பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதனை அடுத்து மார்ச் 31 வரை கேஒய்சி தேதி நீட்டிக்கப்பட்டது.
Story written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications