இந்தியாவில் சாமானிய மக்களால் அதிகம் பயன்படுத்தும் முக்கிய சேமிப்பு திட்டமாக விளங்குவது சிட் பண்ட் தான், இந்த நிலையில் சிட் பண்ட் துறை வர்த்தகத்தை காப்பற்ற வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஆந்திராவில் நடந்த ஒரு பிரச்சனை.
இந்தியாவில் நடுத்தர மக்கள் திருமண செலவுகள் முதல் பள்ளி, கல்லூரி பீஸ் வரையில் அனைத்து தேவைகளுக்கம் பணத்தை சேர்க்க முக்கிய கருவியாக இருந்தது சிட் பண்ட். இதில் பல மோசடி சம்பவங்கள் நடந்திருந்தாலும் இந்தியாவில் சிட்பண்ட் என்பது மிகவும் முக்கியமான முதலீட்டு திட்டமாகவே உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் சிட் பண்ட் சார்ந்த பிரச்சனை தற்போது பெரும் அரசியல் பிரச்சனையாகவே மாறியுள்ளது.

சிட் பண்ட் முதலீட்டில் இருக்கும் முக்கியமான அம்சம் வங்கி வைப்பு நிதியைகாட்டிலும் அதிக வட்டி, குறைவான மாத தவணையில் பெரும் தொகையை பெற முடியும் என்பது தான். இதனாலேயே பல கோடி மக்கள் சிட் பண்ட் முதலீட்டை அதிகம் நம்பியுள்ளனர். சிட் பண்ட் முதலீடு பாதுகாப்பானதா என்றால் அரசு அங்கிகாரம் பெற்ற சிட் பண்ட்-ல் முதலீடு செய்யலாம்.
ஆந்திராவில் மிகவும் பிரபலமான மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான செருகூரி ராமோஜி ராவ் மற்றும் அவரது மருமகளும் நிர்வாக இயக்குநருமான செருகுரி சைலஜா ஆகியோர் மீது நிறுவனத்தின் பணத்தை திசை திருப்பியது மற்றும் பல்வேறு விதி மீறல்களை செய்ததாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிஐடி (குற்றப் புலனாய்வுத் துறை) எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் சிட் பண்ட் முடிந்தவர்களுக்கு காரணம் இல்லாமல் தொகையை அளிப்பதை நிறுத்தி வைத்திருப்பது, டெபாசிட் தொகைக்கு எவ்விதமான செக்யூரிட்டி இல்லாமல் இருப்பது என பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் சுமார் 30000 பதிவு செய்யப்பட்ட சிட் பண்ட்கள் உள்ளது, இதில் வருடாந்திர விற்றுமுதல் (TURNOVER) மட்டும் 60000 கோடி ரூபாய்.
ஆந்திர பிரதேச சிஐடி வழக்கை தொடர்ந்து மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் நிதியின் மேலாளர்கள் மற்றும் தணிக்கையாளர் கைது, மாதாந்திர ஏலங்களை நடத்துவதைத் தடுப்பது மற்றும் புதிய குழுக்களைத் தொடங்குவது என இத்துறை தொழில்துறையை சீர்குலைத்து.
மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் பல தசாப்தங்களாக இயங்கி வருவது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்றுநோய் போன்ற நெருக்கடிகளின் போது பல ஆயிரம் மக்களுக்கு இந்த சிட் பண்ட்-கள் உதவியது. இதனால் மத்திய அரசு மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் மீதான ஆந்திர பிரதேச சிஐடி வழக்கில் தலையிட வேண்டும் என்று இத்துறையே சேர்ந்தவர்கள் மத்திய நிதியமைச்சகத்திடமும், ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த புகாரும் இல்லை என்றும், தற்போது நிலவும் குழப்பங்கள் மத்தியிலும் அவர்களின் உறுதிப்பாட்டிற்கு மதிப்பளித்து வருவதாக, அகில இந்திய சிட் ஃபண்ட் சங்கம் நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிட் பண்ட்-கள் Chit Funds Act 1982 விதியின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஆந்திர பிரதேச சிஐடி வழக்கை தொடர்ந்து மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்த செருகூரி ராமோஜி ராவ் மற்றும் செருகுரி சைலஜா ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ்-ன் ஆடிட்டரான Brahmayya & Co நிறுவனத்தின் பார்ட்னரான தணிக்கையாளர் கூடரவல்லி ஷ்ரவன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மார்ச் மாதம் துவக்கத்தில் ஆந்திர பிரதேச சிஐடி மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ்-க்கு சொந்தமான 12 இடத்தில் சோதனை செய்ததில் இருந்து பிரச்சனை பெரியதாவது மட்டும் அல்லாமல் அரசியல் சார்ந்த பிரச்சனையாக மாறியுள்ளது. யார் இந்த Cherukuri Ramoji Rao..? செருகூரி ராமோஜி ராவ் பத்ம விபூஷன் விருது பெற்றவர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் செருகூரி ராமோஜி ராவ் பல துறையில் வர்த்தகம் செய்து வருகிறார். உலகின் மிகப்பெரிய சினிமா தளமான Ramoji Film City, ஈநாடு பத்திரிக்கை, ஈடிவி சேனல், சினிமா தயாரிப்பு நிறுவனமான உஷா கிரன் மூவீஸ், மார்கதர்சி சிட் ஃபண்ட்ஸ், டால்பின் குரூப் ஹோட்டல்ஸ், காலன்ஜலி ஷாப்பிங் மாஸ், பிரியா ஊறுகாய், Mayuri Film Distributors என பல வர்த்தகத்தை கொண்டு உள்ளார்.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications