சீனாவில் தொட்டதற்கெல்லாம் கட்டுப்பாடு தான். அதிலும் அங்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் அதிரடியாகத் தான் இருக்கும். இதன் மூலம் சீனாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழுமத்திற்கும், அச்சத்திற்கும் மத்தியில் தான் இயக்கி வருகின்றனர்.
உதாரணமாக சீனா அரசு சீன டெக் நிறுவனங்கள் மீது எடுத்த அதிரடியான நடவடிக்கையில் வீழ்ந்த பங்குகள் இன்று வரையில் மீளவில்லை, இது மட்டும் அல்லாமல் பல தனியார் டெக் நிறுவனங்கள் அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் அல்லது கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
இந்தக் கட்டுபாடுகள் காரணமாக உலகின் பிரபலமான சந்தை மற்றும் முதலீட்டு நிபுணரான மார்க் மோபியஸ் சீனாவுக்கு மாற்று முதலீட்டு இடமாக இந்தியா விளங்கும் என தெரிவித்துள்ளார்.
மார்க் மோபியஸ்!
பிரிட்டன் நாட்டின் லண்டனைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவரான Mobius Capital Partners நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சந்தை நிபுணரான மார்க் மோபியஸ் இந்தியாவில் முதலீட்டு உத்திகள் குறித்தும், அவை மற்ற நாடுகளிலிருந்து எப்படி வேறுபட்டுள்ளது என்பது குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மார்க் அவர்கள் சீனாவின் HSBC வங்கியிலிருந்து அவரின் பணத்தை எடுக்க முடியாமல் தவிப்பதாகவும், அதற்கு சீனாவின் கட்டுப்பாடுகள்தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
சீனாவின் கட்டுப்பாடுகள்!
சீன அரசு நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த பல கடுமையான விதிகளை சமீபத்தில் விதித்துள்ளது. அதில் மார்க் மோபியஸ், சீன வங்கியான HSBC வங்கியிலிருந்து அவரின் பணத்தை எடுக்க முயன்றபோது நீங்கள் எடுக்கப்போகும் பணத்தை எப்படி கடந்த 20 ஆண்டுகள் சம்பாதித்தீர்கள் என்ற விளக்கம் அளித்த பிறகுதான் கொடுக்க முடியும் எனக் கூறியதாக ஒரு செய்திச் சேனலுக்கு பேட்டியில் கூறியுள்ளார்.
பைத்தியக்கார தனம்
மேலும் இது பைத்தியக்காரத் தனமான ஒன்று எனவும், கட்டுப்பாட்டிற்கான காரணத்தை அவர் கோரிய நிலையில் சரியான விளக்கமும், பதிலும் மார்க் மோபியஸ்-க்கு HSBC நிர்வாகம் அவர்களுக்கு அளிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
சீனா பொருளாதாரம்!
சீனாவின் புரட்சித் தலைவர் டெங் சியோபிங் (Deng Xiaoping) இருந்த காலகட்டதைக் காட்டிலும் தற்போது மிகவும் கடுமையான வணிக மற்றும் முதலீட்டு உத்திகளை கையாள்வதாக மார்க் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும் ஃபாக்ஸ் பிசினஸ் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்ய ஏற்ற நாடுகளின் முதல் 3 இடங்களிலிருந்து சீனா இனி இருக்காது எனக் தெரிவித்துள்ளது.
சீனாவின் வளர்ச்சி
சீனாவின் GDP அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு வெறும் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாகவும், கோவிட்-19 தொடர்ந்து நாட்டில் பல தனியார் நிறுவனங்கள் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி அறிக்கைகள் கூறுகின்றனர்.
இந்தியாதான் பெஸ்ட்!
இந்த நிலையில் மார்க் மோபியஸ் வர்த்தக செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரிடம் முதலீடுகளுக்கு ஏற்ற நாடு எது எனக் கேட்கப்பட்டதற்கு, இந்தியாதான் சிறந்த இடம் எனவும், இந்தியாவால் சீனா செய்யும் அதே வேலையைச் (வளர்ச்சி) சிறப்பாக செய்ய முடியும் என்று கூறி பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் முதலீடு
மேலும் இந்தியாவில் முதலீட்டுக் சிறந்த இடமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் வாய்ப்புள்ள நாடாகவும் உள்ளது எனவும் போபியஸ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு பில்லியன் இந்தியர்கள் சீனர்கள் செய்யும் அதே வேலையை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்!
அமெரிக்காவின் மூத்த முதலீட்டாளரான மார்க் மோபியஸ் முதலீடுகள் பற்றிக் கூறுகையில், முதலீட்டாளர்கள் தங்களின் முதலீட்டு சதவிகிதத்தில் 10 சதவிகிதமாவது தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அவசரப் பணத் தேவை
ஏனெனில் நீங்கள் நிலம் அல்லது வீட்டில் முதலீடு செய்தால் உங்கள் அவசரப் பணத் தேவைக்காக அவற்றை உடனடியாக விற்க முடியாது. ஆனால் அதே தங்கம் எனில் அன்றைய மார்க்கெட் விலைக்கு உடனடியாக விற்று உங்கள் பணத் தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
More From GoodReturns

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!



Click it and Unblock the Notifications