இந்திய பங்கு சந்தையானது கடந்த வார இறுதியில் சரிவினைக் கண்டு முடிவடைந்தது. இது கடந்த வாரத்தில் மட்டும் டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1,68,552.42 கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இதில் டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய இழப்பினை கண்டுள்ளது.
இது கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 1492.52 புள்ளிகள் அல்லது 2.43% சரிவினைக் கண்டது. இது வரும் வாரத்திலும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தையில் தாக்கம்
சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இதுவும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தான தரவுகளும் தொடர்ந்து சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
ரிலையன்ஸ் இண்ஸ்டஸ்ட்ரீஸ் & எஸ்பிஐ
இதற்கிடையில் கடந்த வார சரிவின் மத்தியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 42,994.44 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 16,92,411.37 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பானது 26,193.74 கோடி ரூபாய் குறைந்து, 5,12,228.09 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி & எல்.ஐ.சி
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் சந்தை மதிப்பானது 22,755.96 கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 8,90,970.33 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இதே எல் ஐ சியின் சந்தை மதிப்பானது 18,690.03 கோடி ரூபாய் குறைந்து, 4,16,848.97 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி & ஹெச்.யு.எல்
இதே ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 16,014.14 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டு, 6,13,366.40 கோடி ரூபாயாக உள்ளது.
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பானது, 11,877.18 கோடி ரூபாய் அதிகரித்து, 6,15,557.67 கோடி ரூபாயாக அதிகரித்தது.
இன்ஃபோசிஸ் & பார்தி ஏர்டெல்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 10,436.04 கோடி ரூபாய் அதிகரித்து, 6,30,181.15 கோடி ரூபாயாக இருந்தது.
ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மதிப்பு 8181.86 கோடி ரூபாய் குறைந்து, 4,78,278.62 கோடி ரூபாயாக முடிவடைந்தது.
ஏர்டெல் & டிசிஎஸ்
இதே பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 7457.25 கோடி ரூபாய் குறைந்து, 4,49,868.21 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 3951.78 கோடி ரூபாய் குறைந்து, 11,80,885.65 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
டாப் 10 நிறுவனங்கள்
டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, பார்தி ஏர்டெல், எல் ஐ சி உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும்.
எப்படியிருக்கும்?
இதற்கிடையில் வரும் வாரத்தில் சந்தை எப்படியிருக்கும்? எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பது இருப்பதால் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். இது தவிர சீனாவில் பரவி வரும் கொரோனா, உக்ரைன் பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் சந்தையில் தாக்கம் இருக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications