கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவின் ஜிடிபி தரவுகள் சரிவைக் காணலாம் என்கிற எதிர்பார்ப்பிலேயே சந்தை சரிவைக் கண்டது. ஆனால்
இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஜிடிபி 4.5 % தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது என உறுதி செய்யப்பட்ட பின் கூட இன்று சந்தை பெரிதாக ஏற்ற இறக்கங்களைக் காணவில்லை. அப்படியே ஃப்ளாட்டாக வர்த்தகமாகி இருக்கிறது. அதோடு பங்குகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த செய்திகள் இப்போது சந்தையை அதிகம் ஆட்கொண்டு இருப்பதாகவே தெரிகிறது.
சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், இந்திய சந்தை இன்னும் பல உயரங்களை தொடும் என்கிற பாசிட்டிவ் சென்டிமென்ட் உடன் இருப்பதை உணர முடிவதாக முன்பே சொல்லி இருந்தோம். அந்த சென்டிமென்ட்-க்கு இன்றைய வர்த்தகம் மீண்டும் ஒரு சாட்சி.

அதோடு சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவாகி இருக்கிறது. அந்த பேட்டன் உருவானதால், 41,000 ஒரு வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே நவம்பர் 29க்கான சார்ட்டில் 41,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவடையவில்லை.
அதே போல ஜிடிபி தரவுகள் மற்றும் பொருளாதார செய்திகள் அடிப்படையில் தான், அடுத்த வார வர்த்தகத்தைக் கணிக்க முடியும். எனவே ஏற்றம் காண்பது சிரமம் தான் என வெள்ளிக்கிழமையே சொல்லி இருந்தோம். அதே போல இன்று சென்செக்ஸ் இண்டெக்ஸ் ஃப்ளாட்டாகத் வர்த்தகமாகி இருக்கிறது.
ஒருவேளை சந்தை நாளை, ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 41,000 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 41,125 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
ஒருவேளை சந்தை மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 40,650 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,500 புள்ளிகளை அடுத்த வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,793 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,072 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,802 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 8 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,137 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,048 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 7 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 11 பங்குகள் ஏற்றத்திலும், 19 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,742 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,050 பங்குகள் ஏற்றத்திலும், 1,503 பங்குகள் இறக்கத்திலும், 189 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,742 பங்குகளில் 55 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 150 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், க்ராசிம், ஜே எஸ் டபிள்யூ ஸ்ட்டில், ரிலையன்ஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், பஜாஜ் ஃபனான்ஸ், ஈஷர் மோட்டார்ஸ், ஓ என் ஜி சி, பார்தி இன்ஃப்ராடெல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications