மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியினை குறைத்திருக்கிறது. இது செப்டம்பர் 22ஆம் தேதியான நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது. சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியும் இந்த முறை குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கார்களின் விலையும் குறைந்து இருக்கிறது.
அரசு சிறிய ரக கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28%இல் இருந்து 18%ஆக குறைத்துள்ளது. அதே போல பிரீமியம் ரக கார்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 28% ஜிஎஸ்டி மற்றும் காம்பன்சேஷன் வரி என வரியே 50% வரை சென்றுவிடும், அது தற்போது 40% என கொண்டு வரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பை தொடர்ந்து அந்த பலனை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே வழங்குவதாக கார் விற்பனை நிறுவனங்கள் அறிவித்தன.

இதன்படி பல கார்களின் விலைகளும் குறைந்துள்ளன. இந்த சூழலில் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்களை முன்பதிவு செய்துள்ளன. இந்தியாவில் கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் மாருதி சுசுகி நிறுவனத்தை பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 30,000கார்களை டெலிவரி செய்திருக்கிறது. இது தவிர கார்கள் வாங்குவது தொடர்பாக 80 ஆயிரம் பேர் விசாரித்து சென்று இருக்கிறார்கள்.
கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாளில் கார்கள் விற்பனை மற்றும் கார்கள் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது . ஜிஎஸ்டி வரி குறிப்பை தொடர்ந்து கார்களின் விலையை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது தொடர்ந்து தினமும் 15,000 கார்கள் விற்பனைக்காக முன்பதிவு செய்வதாகவும் இது வழக்கத்தை விட 50 சதவீதம் அதிகம் என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை மக்களிடையே கார்கள் வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்திருக்கிறது இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி வரி குறைப்பு தான் என மாருதி சுசுகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பார்த்தோ பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். குறிப்பாக சிறிய ரக கார்களை வாங்குவதற்கான ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும் இத்தகைய கார்களுக்கான புக்கிங் 50 சதவீதம் வரை அதிகரித்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார் .

புதிதாக கார்கள் வாங்குவது தொடர்பாக நாள்தோறும் என்கொயரிகள் அதிகரிக்கின்றன, எனக்கு தெரிந்து சில மாடல் கார்கள் அவுட் ஆப் ஸ்டாக் கூட ஆகலாம் என்று கூறியிருக்கிறார். அதேவேளையில் இந்தியாவின் மற்றொரு முன்னணி கார் விற்பனை நிறுவனமான ஹுண்டாய் மோட்டார் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரம் கார்களை டெலிவரி செய்திருப்பதாக கூறி இருக்கிறது.
இந்த பண்டிகை நிச்சயம் மிகச்சிறந்த ஒரு பண்டிகை காலமாக இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஒரே நாளில் 11 ஆயிரம் கார்களை டெலிவரி செய்திருப்பதாகவும் அடுத்த வரும் நாட்களில் கார்களுக்கான டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications