இந்தியாவில் 22 ஆம் தேதியிலிருந்து ஜிஎஸ்டி வரி திருத்தம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி என்பது கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது . இதன் எதிரொலியாக பல்வேறு பொருட்களின் விலையும் குறைய இருக்கிறது .
குறிப்பாக இந்தியாவில் சிறிய ரக கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு வாகன விற்பனை நிறுவனங்களும் தங்கள் நிறுவன வாகனங்களின் விலையை குறித்து தொடர்ச்சியாக அறிவிப்பை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமான மாருதி சுசுகி ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை முழுவதுமாக வாடிக்கையாளர்களுக்கு தருவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தங்கள் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யக்கூடிய பல்வேறு கார்களின் விலையையும் குறைத்து அறிவித்துள்ளது. வரும் 22 ஆம் தேதியிலிருந்து இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்று மாருதி சுசுகி தெரிவித்திருக்கிறது. இதன்படி மாருதி சுசுகி நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படக்கூடிய என்ட்ரி லெவல் கார்களான ஆல்டோ கே10 (Alto K10), எஸ்பிரஸோ(S-Presso) கார்கள் விலைகள் குறைந்துள்ளன.
எஸ்பிரஸோ கார் 1.29 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆல்டோ கே10 கார்கள் 1.07 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி விற்பனை செய்யக்கூடிய எஸ்யூவி ரக கார்களின் விலையும் குறைந்து இருக்கிறது. பிரஸ்ஸா , ஃபிரான்க்ஸ் கார்களின் விலை 1.12 லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு சிறிய ரக கார்கள் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்து இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் மாருதி சுசுகி தங்களுடைய கார்களின் விலையையும் குறைத்து இருக்கிறது. இந்தியாவில் சிறிய ரக கார்களின் விற்பனை குறைந்துவிட்டது என தொடர்ச்சியாக மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து வந்த நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் விதமாக இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு வந்திருக்கிறது.
கடந்த மாதம் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த மாதம் ஃபேக்டரிகளில் இருந்து டீலர்ஷிப்புகளுக்கு 3, 21,840 கார்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8.8 சதவீதம் குறைவாகும்.
மாருதி சுசுகியின் இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் மூலம் மாருதி சுசுகி என்ட்ரி லெவல் கார்களான ஆல்டோ , செலரியோ , வேகனார் உள்ளிட்டவற்றுக்கு இந்த பண்டிகை காலத்தில் நல்ல டிமாண்ட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் விலை சுமார் 71 ஆயிரத்திலிருந்து 1.29 லட்சம் வரை குறைந்திருக்கிறது என்பதால் மிடில் கிளாஸ் மக்கள் அதிக அளவில் இவற்றை வாங்க முன் வருவார்கள் .
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications