இந்தியாவில் கார் தயாரிப்பிலும், விற்பனையிலும் கடந்த சில வருடத்தில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கார் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது மாருதி சுசுகி இந்தியா. குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் போன்ற காரணங்களால் மாருதி சுசுகி கார்களை இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான டாப் 10 மாடல்களில் மாருதி சுசுகியின் பல மாடல்கள் இடம் பெற்றுள்ளன. மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகன விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

அதனால் அந்நிறுவனம் வாகன உற்பத்தியை அதிகரிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ஹரியானாவின் கார்கோடாவில் 3வது ஆலையை நிறுவ மாருதி சுசுகியின் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக பங்குச் சந்தை அமைப்பிடல் தாக்கல் செய்த அறிக்கையில் மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
மேலும் அறிக்கையில், தற்போது கார்கோடாவில் செயல்பட்டு வரும் ஆலை ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது ஆலை கட்டுமானத்தில் உள்ளது. இந்த ஆலையும் ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ளது.
தற்போது மாருதி சுசுகி வாரியம் ஒப்புதல் அளித்துள்ள இந்த 3வது ஆலையை சேர்ப்பதன் மூலம், 2029ம் ஆண்டுக்குள், கார்கோடாவின் மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. 3வது ஆலை அமைப்பதற்கு ரூ.7,410 கோடி முதலீடு தேவைப்படும் என்று மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
இதுதவிர ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஆலையை தொடங்கவும் மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு பொருத்தமான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2024ம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் தனது வரலாற்றில் முதல் முறையைாக ஒரு காலண்டர் ஆண்டில் (ஜனவரி-டிசம்பர்) 20 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.
மேலும், இந்த சாதனை சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் உலகளாவிய ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலைகளில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் நிறுவனமாக மாருதி சுசுகியை மாற்றியதாக அந்நிறுவனம் கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தது.
மாருதி சுசுகி நிறுவனம் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்த 20 லட்சம் வாகனங்களில் சுமார் 60 சதவீதம் ஹரியானாவில் உள்ள ஆலைகளில் தயாரிக்கப்பட்டன. எஞ்சிய 40 சதவீத வாகனங்கள் குஜராத்தில் உள்ள அதன் ஆலையில் தயாரிக்கப்பட்டவை. மேலும் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 20 லட்சம் வாகனங்கள் எர்டிகா ஆகும். இது ஹரியானாவில் உள்ள மானேசரை சார்ந்த உற்பத்தி ஆலையிலிருந்து வெளியானவை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications