மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஒரு உணவகம் ஒரு நாளைக்கு 48 பேருக்கு மட்டுமே சேவை செய்து ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
மும்பையின் லட்சுமி மில்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது MASQUE என்ற உணவகம். இந்த உணவகத்திற்கு அத்தனை எளிதாக சென்று நாம் உணவருந்திவிட முடியாது. முன்கூட்டியே பதிவு செய்தவர்கள் மட்டுமே செல்ல முடியும். இங்கே ஒரு நாளைக்கு 48 பேர் மட்டுமே அமர்ந்து உண்ணக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே ஒரு நாளைக்கு 48 பேருக்கு மட்டுமே இங்கே உணவு கிடைக்கும். எனவே தான் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சேவை வழங்கப்படுவதாக உணவக நிர்வாகம் தெரிவிக்கிறது.

திங்கள்கிழமையில் மட்டும் உணவகம் செயல்படாது, மற்றபடி செவ்வாயிலிருந்து ஞாயிற்றுக்கிழமை என வாரத்தின் 6 நாட்கள் உணவகம் செயல்படும். 2016ஆம் ஆண்டில் அதிதி என்பவரால் இந்த உணவகம் தொடங்கப்பட்டு இந்தியாவின் நம்பர் 1 உணவகம் என பெயர் பெற்றுள்ளது. இந்த உணவகத்தில் 10 வகையான உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சீசனுக்கு ஏற்ப இங்கே உணவு பட்டியல் மாறுகிறது.
இந்த உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நவீன கட்டமைப்பில் பாரம்பரிய உணவுகளை வழங்கக்கூடிய ஒரு உணவகமாக இந்த மாஸ்க் உணவகம் இருக்கிறது. இங்கே உணவுகள் பார்த்து பார்த்து தயார் செய்யப்படுவதால் மிகவும் ருசியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால்தான் இங்கே ஒரு நாளைக்கு 48 பேருக்கு மட்டுமே என கட்டுப்பாடு வைத்துள்ளனர்.

வாரத்தில் 6 நாட்கள் இந்த உணவகம் செயல்படுகிறது. அந்த வகையில் 288 பேருக்கு மட்டுமே ஒரு வாரத்திற்கு உணவு வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 1152 பேர் மட்டுமே இங்கே உணவு உண்ண முடியும். ஒரு ஆண்டிற்கு என பார்க்கும் போது மொத்தமே 14 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உணவகத்தில் உணவு உண்ண முடியும்.
இங்கே முன்பதிவு செய்வதற்கு மதுபானத்தோடு சேர்ந்த உணவு என்றால் ஒரு கட்டணமும் மதுபானம் இல்லாமல் வெறும் உணவு மட்டும் என வரும்போது ஒரு கட்டணமும் என விதிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த உணவகம் ஒரு ஆண்டுக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறது. சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் இங்கே உணவுக்காக முன்பதிவு செய்வதற்கே சுமார் 11 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த உணவகத்திற்கு சென்று அனைவரும் உணவு உண்டு விட முடியாது. எனவே ஸ்பெஷலான ஒரு உணர்வையும் தனித்துவமான அனுபவத்தையும் இந்த உணவகம் தருகிறது. இங்கே குறைந்த ஆட்களுக்கு மட்டுமே உணவு தயாரிப்பதால் அவர்கள் பார்த்து பார்த்து தயாரிக்கிறார்கள் என்பதும் மற்றொரு காரணம். இந்த உணவகத்தை பொருத்தவரை இந்தியாவிலேயே நம்பர் ஒன் உணவகம் என்ற பெயரையும் ஆசியாவிலேயே 23வது சிறந்த உணவகம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
உலக அளவில் சிறந்த உணவகங்களைப் பட்டியலில் இந்த உணவகத்திற்கு 78வது இடம் கிடைத்துள்ளது. ஒரு தொழிலை செய்யும் போது அந்த வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான ஒரு அனுபவத்தையும் உணர்வையும் தரும்போது விலையை பார்க்காமல் அவர்கள் அதனை அனுபவிக்க தொடங்குவார்கள் என்பது தான் இந்த உணவகம் கற்றுத் தரும் பாடம்.குறைந்த வாடிக்கையாளர்களே இருந்தாலும் அவர்களுக்கு தரமான பொருட்களை நாம் வழங்கும்போது அந்த தொழில் பெரிய அளவில் வெற்றி அடைகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications