தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்னைக்கு நகை வாங்குனா ரூ.5,700 சேமிக்க முடியும்..!!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 16ஆம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருக்கிறது. அந்த வகையில் இன்றும் விலை சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 210 ரூபாய் விலை குறைந்து 13,350 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் விலை 1680 ரூபாய் விலை குறைந்து 1, 06,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் 16ஆம் தேதி முதல் ஒப்பிட்டு பார்த்தால் தமிழ்நாட்டில் ஆபரண தங்கம் ஒரு கிராம் 720 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் என பார்த்தால் 5,760 ரூபாய் விலை சரிந்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் தங்கம் வாங்குவோர் 5,670 ரூபாய் சேமிக்கலாம்.

தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்னைக்கு நகை வாங்குனா ரூ.5,700 சேமிக்க முடியும்..!!

இன்றைய விலைக்கு ஒரு சவரன் தங்க நகை வாங்க வேண்டும் என்றால் 12% செய்கூலி சேதாரம், 3% ஜிஎஸ்டி சேர்த்து 1.23 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். தங்கம் விலை குறையும் போது நாம் செலுத்தும் செய்கூலி சேதாரமும் குறைகிறது என்பதை நினவில் கொள்ள வேண்டும்.

Also Read

24 கேரட் தங்கமும் இன்றைய தினம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் 14,564 ரூபாய்க்கும் 10 கிராம் 1,45,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 11,170 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்றைய தினம் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் 10 ரூபாய் சரிவடைந்து 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2,40,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை பொறுத்தவரை ஜனவரி மாதம் ஒரு சவரன் 1.33 லட்சத்தை தொட்டது. அதில் இருந்து சுமார் 27,000 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. அதே போல வெள்ளி ஒரு கிலோ 4.25 லட்சமாக இருந்து தற்போது 2.4 லட்சமாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. எனவே தங்கம், வெள்ளி வாங்குவதற்கு இது தான் சரியான தருணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

தற்போது தங்கம் விலை போக்கு இறங்குமுகமாக இருக்கிறது. நீண்ட காலம் இதே நீடிக்காது, மீண்டும் விலை உயர தொடங்கினால் அடுத்த உச்சபட்ச விலையை எட்டி தான் நிற்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கம் வாங்குவதற்கும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் இதுவே சிறந்த காலம் என தெரிவிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+