மத்தியபிரதேசம்: உலகின் அதிக மதிப்பு கொண்ட ஒரு பொருளாக இருக்கிறது தங்கம். பூமிக்கு அடியில் கிடைக்கும் தனிமங்களை பிரித்தெடுத்துபதன் மூலம் தான் தங்கம் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் பல்வேறு நாடுகளும் பூமிக்கடியில் இருக்கும் தங்கத்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.
தங்கப்புதையல்: இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் சீனாவும் பாகிஸ்தானும் தங்கள் நாடுகளில் புதிதாக தங்கம் இருப்பதை கண்டுபிடித்து அறிவிப்பு வெளியிட்டன. இந்நிலையில் இந்தியாவிலும் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் என்றாலே இரும்பு தாதுக்கு பெயர் போனது. அளவுக்கு அதிகமாக அங்கு கிடைக்கக்கூடிய இரும்பு தாது தான் அந்த நகரத்தின் அடையாளமாகவே இருக்கிறது. ஆனால் இந்த நகரம் ஒரு மிகப்பெரிய தங்கப் புதையலை கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஜபல்பூரின் தங்கச்சுரங்கம்: இந்தியாவின் புவியியல் ஆய்வு அமைப்பு மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் பகுதியில் இருக்கக்கூடிய மக்வான் கொலேரி பகுதியில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வுகளுக்கு உட்படுத்தியது. அதில் பூமிக்கடியில் பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதியில் அதிக அளவிலான இரும்பு தாது மற்றும் மங்கனீஸ் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது . இங்கே பெருமளவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்பட்டு பிராசஸ் செய்யப்படுகிறது.
100 ஹெக்டேருக்கு தங்கம்: இந்த பகுதி பெரிய அளவில் தங்கத்தையும் தன்னகத்தை கொண்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . தங்கம் மற்றும் செம்பு இந்த பகுதியில் அதிகளவில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர் . 100 ஹெக்டேர் பரப்பளவுக்கு இங்கே தங்கம் புதைந்து கிடப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள் இதனை பிரித்தெடுத்தால் பல லட்சம் டன்கள் தங்கம் நமக்கு கிடைக்கும் என கூறுகின்றனர்.
ஆய்வு முடிவுகள்:பல்வேறு தனிமங்கள் நிறைந்த இந்த மண்ணை பல கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தி ரசாயன ஆய்வுகளும் நடத்தியதில் தங்கம் ,செம்பு மற்றும் பிற அறிய வகை தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் இந்த அறிவிப்பை அடுத்து இங்கே தங்க சுரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்கப்படும்.

மாறப்போகும் ஜபல்பூர்: ஆய்வறிக்கையை தொடர்ந்து இங்கே சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுப்பதற்கான ஒப்பந்தம் விடும் பணிகளை அரசு முன்னெடுக்கும். தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் இதில் ஒப்பந்தம் பெற முடியும். எந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கிடைக்கிறதோ அந்த நிறுவனம் சுரங்கம் அமைத்து தங்கத்தை பிரித்தெடுக்கும். இந்த பணிகள் தொடங்கினால் ஜபல்பூரின் அடையாளமே மாறிவிடும்.
தங்கம் விலை குறையுமா: பொருளாதார ரீதியாகவும் கட்டமைப்பு வேலைவாய்ப்பு ரீதியாகவும் ஜபல்பூரும் மத்திய பிரதேச மாநிலமும் இந்தியாவும், வளர்ச்சி பெறும். இந்தியாவிலேயே தங்கம் உற்பத்தி செய்யப்படுவது நாம் பெருமளவில் தங்கத்தை இறக்குமதி செய்வதை குறைக்கும். மேலும் இது உள்நாட்டில் தங்கம் விலையை குறைக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications