தங்க இறக்குமதியில் யூ-டர்ன்.. யாரும் எதிர்பார்க்காத மெகா சரிவு..!!

தங்கத்தையும் இந்திய மக்களையும் பிரிக்க முடியாது என்ற நிலை மாற்றி, தற்போது இந்திய தங்க இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு உலகையே அதிர வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

உலக தங்க கவுன்சில் வெளியிட்ட தரவுகள் படி செப்டம்பர் மாதம் இந்தியாவில் தங்க இறக்குமதி என்பது யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 81 சதவீதம் குறைந்துள்ளது.

தங்க இறக்குமதியில் யூ-டர்ன்.. யாரும் எதிர்பார்க்காத மெகா சரிவு..!!

செப்டம்பர் மாதம் வெறும் 1.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை மட்டுமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது, இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் சுமார் 81 சதவீதம் குறைவு என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

மோடி தலைமையிலான அரசு தங்க இறக்குமதியைக் குறைக்கச் சுங்க வரியை அதிகரித்தது, தங்கம் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் பழைய தங்கத்தைக் கொண்டு புதிய நகைகளை வாங்குவது எனப் பல மாற்றங்கள் தங்க நுகர்வோர் சந்தையில் நடந்திருக்கும் வேளையில் செப்டம்பர் மாதத்தில் வெறும் 20 டன் தங்கம் மட்டுமே வந்துள்ளது.

இந்தியாவில் இது பண்டிகை காலம், திருமணங்கள் அதிகம் நடக்கும் காலமாக இருக்கும் வேளையிலும் தங்க இறக்குமதி குறைந்திருப்பது இந்தியாவில் தங்கத்திற்கான தேவை உண்மையிலேயே குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் இதே செப்டம்பர் மாதம் சுமார் 4550 கோடி ரூபாய் அளவிலான தொகையை மக்கல் கோல்டு ஈடிஎப்-ல் முதலீடு செய்து 7 மாத உச்சத்தைத் தொட்டு உள்ளது, இதேபோல் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நகைக் கடைகளின் வருவாய் என்பது 20-30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது.

களத்தில் நடப்பது என்னவென்றால் மக்கள் தங்கத்தை தற்போது ஈடிஎப் முதலீட்டின் வாயிலாக அதிகம் சேமிக்கத் துவங்கியுள்ளனர், இதேபோல் நகைக் கடைகளில் இந்த பண்டிகை காலத்திலும் வாடிக்கையாளர் எண்ணிக்கை என்னவோ ஒரு இலக்க அளவில் தான் உயர்ந்துள்ளது.

அடுத்த விஷயம், நகை கடைகளின் வருமானம் எப்படி உயர்கிறது..?

வாடிக்கையாளர்கள் வருகையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் தங்கம் விலை உயர்வின் காரணமாக சராசரி பில் தொகை உயர்ந்துள்ளது, இதன் வாயிலாக வருவாயும் உயர்ந்துள்ளது.

எனவே நகை கடைகள் தற்போது பெரும் பகுதி வர்த்தகத்தை பழைய நகைகளை கொண்டு புதிய நகையாக மாற்றும் காரணத்தால் புதிய தங்கத்திற்கான தேவை பெரியளவில் குறைந்துள்ளது, இதனால் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு குறைந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 14,395 ரூபாய்க்கும், 22 கேரட் விலை 1 கிராம் 13,195 ரூபாய்க்கும் வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+