டெல்லி: நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் மே மாதத்தில் ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் அதிகரிப்பால் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று நிதி அமைச்சகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, மே மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி (GST) வரி வசூல் 10 % உயர்ந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த மாதம் ரூ.2.10 லட்சம் கோடியை எட்டியது. இது, நாட்டின் வலுவான பொருளாதார செயல்பாட்டைக் குறிக்கிறது.

ஜிஎஸ்டி வசூல் சாதனைக்கான காரணிகள்:
உள்நாட்டு விற்பனை அதிகரிப்பு: மே மாதத்தில் உள்நாட்டு விற்பனை 15.3 % அதிகரித்துள்ளது, இது ஜிஎஸ்டி வரி வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி சரிவு: அதே சமயம், இறக்குமதி 4.3 % குறைந்துள்ளது, இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாய் ஓரளவு பாதிக்கப்பட்டது.
ரீஃபண்டுகளைக் கணக்கிட்ட பிறகு, மே 2024ஆம் ஆண்டுக்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.44 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.9 சதவீத வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறது.
மே 2024 வரை கணக்கிடப்பட 2025ஆம் நிதியாண்டுக்கான மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 3.83 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 11.3 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது. இது உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மே மாதத்தில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 32,409 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 40,265 கோடியாகவும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ. 39,879 கோடியாக உள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு வசூலாக ரூ 1,076 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தில், செஸ் வசூல் ரூ. 12,284 கோடியாக உள்ளது.
மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைத் தாண்டியது.
ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான உயர்வு, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் வரும் காலங்களில் வரி வருவாயை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications