01 ஜூலை 2019, ஜிஎஸ்டி வரி இந்தியாவில் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி வந்ததில் இருந்தே வியாபாரம் சரியாக நடப்பதில்லை என பொதுப் புகார்களும் வந்து கொண்டு தான் இருக்கிறது.
மத்திய அரசும் தன்னால் முடிந்த வரை ஜிஎஸ்டி வரியில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை உள்வாங்கிக் கொண்டு, அவைகளைச் சரி செய்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் பிரச்னைகள் தீர்ந்த பாடில்லை. எத்தனையோ முறை வரிகளை எல்லாம் குறைத்தாகிவிட்டது. சட்ட திட்டங்களை தளர்த்தியோ அல்லது சரி செய்தோ இருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும், ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சனை ஒவ்வொரு தினுசாக எழுந்து கொண்டே தான் இருக்கிறது.
மெக்டொனால்ட்ஸ்
உலகம் முழுக்க, பர்கர் போன்ற விரைவு உணவுகளை விற்றுக் கொண்டு இருக்கும் இந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இந்தியாவிலும் பிரபலம். இந்தியாவில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை பிரான்சைஸ் கொடுத்து நடத்துவது ஹார்ட்கேசில் ரெஸ்டாரன்ஸ்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Hardcastle Restaurants Pvt Ltd) என்கிற நிறுவனம் தான். இப்போது ஜிஎஸ்டி தொடர்பாக புகார் கூறுவது இந்த நிறுவனம் தான்.
என்ன புகார்
ஜிஎஸ்டி வந்த புதிதில், உணவகங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்தார்கள். அப்படி 18 சதவிகிதம் வரி விதித்து இருந்த போது உள்ளீட்டு வரிச் சலுகை பெற அனுமதி இருந்தது. ஆனால் இப்போது 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்து விட்டு உணவகங்களுக்கு உள்ளீட்டு வரியை ரத்து செய்துவிட்டார்கள். இதை எதிர்த்து தான் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
உள்ளீட்டு வரி என்றால் என்ன..?
உதாரணம்: ஒரு நிறுவனம், ஒரு கடையில் இருந்து 100 ரூபாய்க்கு சீஸ் வாங்குகிறார்கள் என்றால், 12% ஜிஎஸ்டி செலுத்த வேண்டி இருக்கும். ஆக 112 ரூபாய் கொடுத்து சீஸ் வாங்குவார்கள். இப்போது இந்த நிறுவனம், வாங்கிய சீஸை கொஞ்சம் மதிப்பு கூட்டி, 150 ரூபாய்க்கு விற்கிறது என வைத்துக் கொள்வோம்.
பாக்கி செலுத்தினால் போதும்
ஆக 150 * 12% = 168 ரூபாய். இந்த 168 ரூபாய்க்கு கிடைத்த 18 ரூபாய் ஜிஎஸ்டி தொகையில் 6 ரூபாய் மட்டும் அரசுக்கு செலுத்தினால் போதும். மீதமுள்ள 12 ரூபாயை உள்ளீட்டு வரியாக கழித்துக் கொள்ளலாம். இது தான் உள்ளீட்டு வரியின் கான்செஃப்ட்.
மெக்டொனால்ட்ஸ் பிரான்சைஸ் தயாரிப்பு
பர்கர், ஐஸ்க்ரீம், பால், எசென்ஸ், சமையல் எண்ணெய், சிக்கன், சாசேஜ், முட்டை, சீஸ், மையோனைஸ், பால், உருளைக்கிழங்கு என பல பொருட்களை ஜிஎஸ்டி செலுத்தி வாங்குகிறோம். கடைசியில், எங்களுக்கு ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரிச் சலுகை இல்லை என்றால், என்ன நியாயம் என கேள்வி எழுப்புகிறார்கள்.
கட்டுப்படி ஆகவில்லை
தங்கள் மூலப் பொருட்களை வாங்கும் போது செலுத்திய ஜிஎஸ்டியை விட, வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் ஜிஎஸ்டி வரி கட்டுப்படி ஆகவில்லை எனவும் தெளிவாகச் சொல்கிறார்கள். அதாவது பல மூல பொருட்களை 12%, 18% என ஜிஎஸ்டி செலுத்தி வாங்கிவிட்டு, 5% மட்டும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டி வசூலிப்பது கட்டுப்படி ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.
நீதிமன்றம்
மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் உணவை இந்தியாவில் விற்கும் பிரான்சைஸி ஹார்ட் கேசில் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தரப்பில், குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்து இருக்கிறார்களாம். அதோடு அரசுக்கு இந்த ஜிஎஸ்டி வரி சிக்கல் குறித்து நோட்டீஸும் வழங்கபட்டு இருக்கிறதாம்.
காத்திருப்பு
எனவே விரைவில் அரசு தரப்பில் இருந்து, இந்த ஜிஎஸ்டி வரி சிக்கல் தொடர்பாக, ஒரு விடை வரும் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்தியாவின் பல மூலைகளில் உணவுக் கடை நடத்தும் உணவக முதலாளிகள். வரி குறைப்பு என்றால், எந்த வியாபாரிக்கு தான் மகிழ்ச்சி இருக்காது சொல்லுங்கள்..?
கருத்து
"உணவகங்களில் ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்தது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் உள்ளீட்டு வரியை ரத்து செய்ததால், உணவகங்களுக்கு வரிச் செலவுகள் அதிகரிக்கும். கடந்த பல மாதங்களாகவே, ஜிஎஸ்டி வரியை அதிகரித்து, உள்ளீட்டு வரிச் சலுகையை கொடுக்கச் சொல்லி உணவகங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறது" என்கிறார் எர்னஸ்ட் & யங் நிறுவனத்தின் கூட்டாளி அபிஷேக் ஜெயின்.
ஜிஎஸ்டி வரி குறித்த அரசின் பதிலுக்கும், குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கும் வியாபாரிகளோடு நாமும் காத்திருப்போம்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications