உலகின் மிகப்பெரிய பாஸ்ட்புட் நிறுவனமான McDonald தனது அமெரிக்க தலைமை அலுவலகம் உட்பட அனைத்து மெக்டொனால்ட்ஸ் கார்ப்பரேட் அலுவலகத்தை அடுத்த 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு முக்கியமான காரணம் McDonald's நிர்வாகம் கார்ப்பரேட் நிர்வாகத்தில் இருக்கும் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவில் மறுசீரமைப்பு நடவடிக்கை அதாவது பணிநீக்க நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் McDonalds நிர்வாகம் தனது தலைமை அலுவலகத்தை தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது.
McDonalds நிறுவனம்
உலகின் மிகப்பெரிய பாஸ்ட்புட் நிறுவனமான McDonalds கடந்த ஆண்டு ரஷ்யாவில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய இழப்பாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு பல பிரச்சனைக்கு மத்தியில் வர்த்தகத்தை துவங்கிய மெக்டொனால்ட்ஸ் கடந்த 3 மாதத்தில் வர்த்தகத்திலும், வருமானத்திலும் அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
அமெரிக்க ஊழியர்கள்
இதை சமாளிக்கும் விதமாக மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் அமெரிக்க ஊழியர்கள் மற்றும் சில சர்வதேச ஊழியர்களை திங்கள் முதல் புதன் கிழமை வரையில் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிட்டு உள்ளது.
வொர்க் ப்ரம் ஹோம்
இதன் மூலம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு தங்களது பணிநீக்கத்தை விர்ச்சுவல் முறையில் அறிவிக்க இது ஏதுவாக இருக்கும் என்பதால் இந்த 3 நாள் வொர்க் ப்ரம் ஹோம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்க சுற்றில் கார்ப்பரேட் ஊழியர்கள் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுவதால் உணவக பணியாளர்கள், டெலிவரி ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
பணிநீக்கம்
மேலும் மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் எத்தனை பேரை பணிநீக்கம் செய்யப்போகிறது என்பதை இதுவரையில் அறிவிக்கவில்லை வொர்க் பர்ம் ஹோம் முடிந்த பின்பு தான், எத்தனை பேர் உண்மையாகவே பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வரும்.
முக்கிய துறைகள்
அமெரிக்காவில் டெக் நிறுவனங்களை தாண்டி கன்சல்டிங், வங்கியியல், நிதி சேவை நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யப்படும் வேளையில் இப்பட்டியலில் முக்கிய உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ்-ம் இணைந்துள்ளது.
முக்கிய சந்திப்பு
இதேபோல் மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் அனைத்து கார்ப்பரேட் ஊழியர்களையும் வாடிக்கையாளர்கள், கிளையன்ட் சந்திப்பை அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யுமாறும் அறிவித்துள்ளது, இதனால் யாரை, எங்கு, எவ்வளவு எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மெக்டொனால்ட்ஸ் நிர்வாகம் அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை எத்தனை பேரை எங்கு பணிநீக்கம் செய்ய உள்ளது என்பதற்காக அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications