தங்கம் விலை தொடர்ந்து சரிய 'இது'தான் காரணம்..!! நடுத்தர மக்களுக்கு இது ஜாக்பாட்..!

தங்க முதலீட்டுச் சந்தையில் இருந்து முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறும் காரணத்தால் இதன் விலையைத் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த வாரத்தின் துவக்கத்தில் தங்கம் விலை சில தடுமாற்றங்களைச் சந்தித்தாலும் கடந்த 2 நாட்களாகச் சரிந்து வருகிறது.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் MCX சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தையிலும் பெரிய அளவிலான சரிவு பதிவாகியுள்ளது.

இதனால் சேமிப்புக்காகவும், குழந்தைகளின் திருமணத்திற்காகத் தங்கம் மற்றும் தங்க நகை வாங்கும் பல கோடி நடுத்தரக் குடும்பங்களுக்கு இது உண்மையிலேயே தங்கம் வாங்கச் சிறந்த காலகட்டமாக விளங்குகிறது.

MCX வர்த்தகச் சந்தை

MCX வர்த்தகச் சந்தை

இன்று MCX வர்த்தகச் சந்தை முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 1.14 சதவீதம் சரிந்துள்ளது. இதன் மூலம் 10 கிராம் தங்கம் விலை 44,366 ரூபாயாகக் குறைந்துள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1.87 சதவீதம் வரையில் சரிந்து 66,283 ரூபாயாக உள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை

இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் இன்று காலை வர்த்தகத்தில் 1,733 டாலருக்குத் துவங்கிய போது தங்க வாங்க நினைத்தோர் பலர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் சரியத் துவங்கிய தங்கம் விலை தொடர்ந்து குறையத் துவங்கியது.

சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இதன் எதிரொலியாக இன்று மாலை வர்த்தக முடிவில் 24 கேரட் ஒரு அவுன்ஸ் தங்கம் சர்வதேச சந்தையில் 1,700 டாலர் வரையில் குறைந்துள்ளது. ஒரே நாளில் கிட்டதட்ட 30 டாலர் குறைந்துள்ளது தங்கம் மீது தற்போது இருக்கும் நிலையற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

தங்கம் விலை குறைய இதுதான் காரணம்

தங்கம் விலை குறைய இதுதான் காரணம்

இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்ததிற்கு மிகவும் முக்கியக் காரணம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காதிருந்த 1.9 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் அமெரிக்கச் சந்தையில் மட்டும் அல்லாமல் உலகளவில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்.

முதலீட்டாளர்கள் முதலீட்டு வெளியேற்றம்

முதலீட்டாளர்கள் முதலீட்டு வெளியேற்றம்

இதன் வாயிலாகப் பங்குச்சந்தை மற்றும் பத்திர சந்தையில் அதிகளவிலான முதலீடும், லாபமும் கிடைக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் பிற முதலீட்டுச் சந்தையில் இருக்கும் முதலீடுகளை அதிகளவில் வெளியேற்றுவது வழக்கம். இதன் எதிரொலியாகத் தான் இன்று தங்கம் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது.

ரீடைல் சந்தை விலை

ரீடைல் சந்தை விலை

இந்நிலையில் இன்றைய ரீடைல் சந்தை வர்த்தகத்தில் 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 700 ரூபாய் வரையில் குறைந்து 41,800 ரூபாய்க்குச் சரிந்துள்ளது. இதேபோல் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 740 ரூபாய் சரிந்து 45,600 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+