தங்கம் விலை அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து உயர்ந்துக்கொண்டே இருக்கப்போகிறது, ஒருப்பக்கம் டிரம்ப் மிரட்டல் மறுபுறம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு, பணவீக்கம் என பொருளாதாரத்தை பாதிக்கும் அனைத்து முக்கியமான பிரச்சனைகளும் உள்ளது. இப்படியிருக்கையில் முதலீட்டாளர்களுக்கு தங்கம் மட்டும் தான் ஒரே தீர்வாக உள்ளது.
அமெரிக்க நேரத்தின் படி ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு உலக நாடுகளின் வரி விதிப்புக்கு எதிராக ரெசிப்ரோக்கல் வரி விதிக்க உள்ளது. இந்த வரி தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்திய சந்தையில் 2025ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1360 ரூபாய் அதிகரித்துள்ளது, அதாவது வெறும் 90 நாளில் 19.02 சதவீதம் தங்கம் உயர்ந்துள்ளது. இந்த 3 மாத காலத்தில் எந்த முதலீட்டு பிரிவும் இத்தகைய லாபத்தை கொடுக்கவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை வர்த்தகத்தில், உலகளாவிய தங்கம் சந்தையில் குறிப்பிடத்தக்க விலை உயர்வு காணப்பட்டது. பல்வேறு பொருளாதார மற்றும் அரசியல் காரணிகள் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்தது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்சிஎக்ஸ்) ஜூன் 2025 முடியும் பியூச்சர்ஸ் தங்கத்தின் விலை, 10 கிராமுக்கு ரூ.91,229 ஆக தொடங்கி, வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 கிராமுக்கு ரூ.91,232 என்ற ஒரு நாள் உச்சத்தை எட்டியது.
இந்த விரைவான உயர்வு, முதலீட்டு சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வேறு வழியே இல்லாமல் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 3,125 டாலராகவும், காமக்ஸ் தங்கத்தின் விலை ஒரு ட்ராய் அவுன்ஸ்-க்கு 3,155 டாலராகவும் இருந்தது.
தங்கத்தின் விலை உயர்வுக்கு பல முக்கிய காரணிகள் பங்களித்து வரும் வேளையில், மோதிலால் ஓஸ்வால் நிறுவனத்தின் கமாடிட்டி ஆராய்ச்சி மூத்த ஆய்வாளர் மனவ் மோடி இன்று காலை தங்கம் விலையின் போக்கு குறித்து கூறுகையில், தங்க விலையை உயர்வுக்கான ஐந்து முக்கிய காரணிகளை பட்டியலிட்டார்.
இதில் முதலாவதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரி அச்சுறுத்தல் உலகளாவிய சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாவதாக, உலக நாடுகளில் நடக்கும் போர் மூலம் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், பாதுகாப்பான சொத்துகளுக்கான தேவையை அதிகரித்துள்ளன.
மூன்றாவதாக, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது. இது மற்ற நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு தங்கத்தை வாங்குவதை மலிவாக்கியது. இதனால் தங்கத்தின் வாங்குவது அதிகரித்துள்ளதாக கூறுகிறார். ஆனால் தங்கம் விலை உயர்வினால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
நான்காவதாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை தீவிரமாக வாங்கி குவிக்கின்றன. இது ஒட்டுமொத்த விலை உயர்வுக்கும் பங்களிக்கிறது. இறுதியாக, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளால் பத்திர சந்தையில் இருக்கும் முதலீடுகள் வெளியேறி தங்கம் மீது முதலீட்டை அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்.
More From GoodReturns

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications