தங்கம் விலை இன்று ரீடைல் சந்தையில் பெரிய மாற்றமில்லாமல் நேற்றைய விலையிலேயே விற்கப்படும் காரணத்தால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் மந்தமாக காணப்படுகிறது. ஆனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வரும் காரணத்தால் நாளைய வர்த்தகத்தில் தங்கம் விலை பெரிய அளவில் உயரும் என தெரிகிறது.
இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2522 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது 2509 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் காமெக்ஸ் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரடுக்கான பியூச்சர்ஸ் ஆர்டர் விலை 32 டாலர் அதிகரித்து 2548.7 டாலராக உள்ளது.

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் காலை வர்த்தகம் துவக்கியது முதல் தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.29 சதவீதம் அதிகரித்து 71,982.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒகு கிலோ வெள்ளி விலை 0.73 சதவீதம் அதிகரித்து 85,830 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 66,950 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 73,040 ரூபாயாக உள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 53,560 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு வெறும் 100 ரூபாய் குறைந்து 92,900 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 130 ரூபாய் குறைந்து 20,648 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,695 ரூபாய், மும்பை - 6,695 ரூபாய், டெல்லி - 6,710 ரூபாய், கொல்கத்தா - 6,695 ரூபாய், பெங்களூர் - 6,695 ரூபாய், ஹைதராபாத் - 6,695 ரூபாய், கேரளா - 6,695 ரூபாய், புனே - 6,695 ரூபாய், பரோடா - 6,700 ரூபாய், அகமதாபாத் - 6,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 6,710 ரூபாய், லக்னோ - 6,710 ரூபாய், கோயம்புத்தூர் - 6,695 ரூபாய், மதுரை - 6,695 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,304 ரூபாய், மும்பை - 7,304 ரூபாய், டெல்லி - 7,319 ரூபாய், கொல்கத்தா - 7,304 ரூபாய், பெங்களூர் - 7,304 ரூபாய், ஹைதராபாத் - 7,304 ரூபாய், கேரளா - 7,304 ரூபாய், புனே - 7,304 ரூபாய், பரோடா - 7,309 ரூபாய், அகமதாபாத் - 7,309 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,319 ரூபாய், லக்னோ - 7,319 ரூபாய், கோயம்புத்தூர் - 7,304 ரூபாய், மதுரை - 7,304 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 53560 ரூபாய், மும்பை - 53560 ரூபாய், டெல்லி - 53680 ரூபாய், கொல்கத்தா - 53560 ரூபாய், பெங்களூர் - 53560 ரூபாய், ஹைதராபாத் - 53560 ரூபாய், கேரளா - 53560 ரூபாய், புனே - 53560 ரூபாய், பரோடா - 53600 ரூபாய், அகமதாபாத் - 53600 ரூபாய், ஜெய்ப்பூர் - 53680 ரூபாய், லக்னோ - 53680 ரூபாய், கோயம்புத்தூர் - 53560 ரூபாய், மதுரை - 53560 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,810 ரூபாய், மும்பை - 25,810 ரூபாய், டெல்லி - 25,810 ரூபாய், கொல்கத்தா - 25,810 ரூபாய், பெங்களூர் - 25,810 ரூபாய், ஹைதராபாத் - 25,810 ரூபாய், கேரளா - 25,810 ரூபாய், புனே - 25,810 ரூபாய், வதோதரா - 25,810 ரூபாய், அகமதாபாத் - 25,810 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 92,900 ரூபாய், மும்பை - 87,900 ரூபாய், டெல்லி - 87,900 ரூபாய், கொல்கத்தா - 87,900 ரூபாய், பெங்களூர் - 84,400 ரூபாய், ஹைதராபாத் - 92,900 ரூபாய், கேரளா - 92,900 ரூபாய், புனே - 87,900 ரூபாய், பரோடா - 87,900 ரூபாய், அகமதாபாத் - 87,900 ரூபாய், ஜெய்ப்பூர் - 87,900 ரூபாய், லக்னோ - 87,900 ரூபாய், கோயம்புத்தூர் - 92,900 ரூபாய், மதுரை - 92,900 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 29.20 - 6,500 ரூபாய்
குவைத் - KWD 22.83 - 6,272 ரூபாய்
மலேசியா - MYR 345 - 6,656 ரூபாய்
ஓமன் - OMR 30.25 - 6,591 ரூபாய்
கத்தார் - QAR 286 - 6,581 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 288 - 6,439 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 102.20 - 6,581 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281.25 - 6,423 ரூபாய்
அமெரிக்கா - USD 76.50 - 6,417 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 281.25 - 6,423 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 281.25 - 6,423 ரூபாய்
துபாய் (UAE) - AED 281.25 - 6,423 ரூபாய்
புஜைரா (UAE) - AED 281.25 - 6,423 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 281.25 - 6,423 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 281.25 - 6,423 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 286 - 6,581 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 30.25 - 6,591 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,439 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31 - 6,900 ரூபாய்
குவைத் - KWD 24.90 - 6,841 ரூபாய்
மலேசியா - MYR 361 - 6,965 ரூபாய்
ஓமன் - OMR 31.90 - 6,950 ரூபாய்
கத்தார் - QAR 305 - 7,018 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 310 - 6,930 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 112.60 - 7,251 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 304 - 6,943 ரூபாய்
அமெரிக்கா - USD 81.50 - 6,836 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 304 - 6,943 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 304 - 6,943 ரூபாய்
துபாய் (UAE) - AED 304 - 6,943 ரூபாய்
புஜைரா (UAE) - AED 304 - 6,943 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 304 - 6,943 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 304 - 6,943 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 305 - 7,018 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 31.90 - 6,950 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 310 - 6,930 ரூபாய்
சர்வதேச அளவில் தங்கம் விலை அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve (Fed) செப்டம்பர் மாதம் தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களைக் குறைப்பது மையப்படுத்தித் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள இதேவேளையில் இந்த வாரத்தில் இந்த வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் 3 முக்கிய தரவுகள் வெளியாக உள்ளது.
அமெரிக்க ஜூலை நிலையான பொருட்களின் ஆர்டர்கள் குறித்த அளவுகள் வெளியிடப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டாம் காலாண்டிற்கான அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் ஜூலைக்கான தனிப்பட்ட நுகர்வு செலவுகள்-விலைக் குறியீடு (PCE) ஆகியவை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். இவை அனைத்தும் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பிற்கு நேரடி தொடர்பில் இருக்கும் காரணத்தால் இது தங்கம் விலையில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications