இந்தியாவின் மிகப்பெரிய கமாடிட்டி வர்த்தக தளமான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX), இன்று காலை வர்த்தகம் துவங்கும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்ய முடியாமல் தவித்தது மட்டும் அல்லாமல் வர்த்தகம் செய்வதற்கான கதவுகள் 10 மணி வரையில் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வழக்கமாக காலை 9 மணிக்கு தொடங்கும் எம்சிஎக்ஸ் வர்த்தகம், இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று எம்சிஎக்ஸ் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் பின் 9.45 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது, கடைசியாக 9.45 மணிக்கு வெளியான அப்டேட்டில் 10.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் கமாடிட்டி பரிவர்த்தனை சந்தையில் 98 சதவீத பங்கை வைத்துள்ள எம்சிஎக்ஸ், தங்கம், வெள்ளி, எரிசக்தி, உலோகங்கள், வேளாண் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களை முதலீடு செய்யவதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் வழங்குகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வரும் இத்தகைய தருணத்தில் இந்த வர்த்தக தாமதம், வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எம்சிஎக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வர்த்தகம் காலை 10.00 மணிக்கு தொடங்கும். மேலும் வர்த்தகம் துவங்கப்படும் போது பேரிடர் மீட்பு தளத்திலிருந்து (DR) வர்த்தகம் தொடங்கப்படும். ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று எம்சிஎக்ஸ் நிர்வாதம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எம்சிஎஸ் நிர்வாகம் இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்த தன்மை அல்லது காரணம் குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. இருப்பினும், பேரிடர் மீட்பு தளத்திலிருந்து வர்த்தகத்தை தொடங்குவது மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் புக்கிங் தரவுகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.
எம்சிஎஸ் தளத்தில் இது தான் முதல் முறையாக தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறதா என்றால் இல்லை, ஜூலை மாதம் எம்சிஎக்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வர்த்தகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications