மத்திய அரசின் டபுள் தீபாவளி பரிசு: இனி அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ காப்பீடு!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அளித்த வாக்குறுதியை போலவே மத்திய அரசு பொது மக்களுக்கு மிகப்பெரிய ஒரு தீபாவளி பரிசை கொடுத்திருக்கிறது . பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில்: இந்த ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தத்தில் மக்களுக்கு கிடைத்திருக்கும் உண்மையான தீபாவளி பரிசு காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்கியது தான். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. ஆனால் இந்தியாவில் 5இல் ஒருவருக்கு தான் மருத்துவ காப்பீடு இருக்கிறது.

மத்திய அரசின் டபுள் தீபாவளி பரிசு: இனி அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ காப்பீடு!!

மருத்துவ காப்பீடு: திடீரென ஏற்படக்கூடிய மருத்துவ செலவுகள் நம் சேமிப்பை கரைத்து நம்மை பெரிய கடனாளிகளாக மாற்றிவிடும். எனவே தான் மருத்துவ காப்பீடு எடுத்து கொள்ளுங்கள் என மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசுகளே மருத்துவ காப்பீடு வழங்கினாலும் அது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு தான் கிடைக்கிறது.

பிரீமியம்: மிடில் கிளாஸ் மக்கள் தனியாரிடம் மருத்துவ காப்பீடு பெற்று வைத்து கொள்வது தான் எதிர்கால மருத்துவ செலவுகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும். கொரோனாவுக்கு பின்னர் வயது வித்தியாசம் இல்லாமல் திடீர் உடல்நல குறைவுகள் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே ஒவ்வொரு குடும்பமும் மருத்துவ காப்பீடு பெற்று வைப்பது நல்லது.

அனைவருக்கும் காப்பீடு: மருத்துவ காப்பீட்டின் தேவை பற்றி மக்கள் உணர்ந்து கொண்டிருந்தாலும் அவற்றுக்கான பிரீமியம் தொகை அதிகமாக இருப்பதால் பலரும் இவற்றை எடுக்க முன் வருவதில்லை. மத்திய அரசு மற்றும் ஐஆர்டிஏஐ பொருத்தவரை இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் மருத்துவ காப்பீடு கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது.

இனி வரி இல்லை: இருந்தாலும் மருத்துவ காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகை அதிகமாக இருப்பதால் அதன் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கினால் பிரீமியம் தொகை குறையும் எனவே பலரும் அவற்றை வாங்குவதற்கு முன் வருவார்கள் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது . இந்த சூழலில் தான் ஜிஎஸ்டி கவுன்சில் இந்தியாவில் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்கள் மீது இத்தனை காலம் வசூல் செய்து வந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

மத்திய அரசின் டபுள் தீபாவளி பரிசு: இனி அனைவருக்கும் மலிவு விலையில் மருத்துவ காப்பீடு!!

எவ்வளவு சேமிப்பு: உதாரணமாக ஒரு குடும்பம் ஒரு சராசரி மிடில் கிளாஸ் குடும்பம் 20,000 ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டத்தை பெறுகிறது என வைத்துக் கொள்வோம். இதற்கு முன்பு அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி தொகையாக 20 ஆயிரம் ரூபாய் காப்பீடு பீரிமியம் மற்றும் ஜிஎஸ்டி 3,600 ரூபாய் என மொத்தம் 23,600 ரூபாயை அவர்கள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பிறகு மருத்துவ காப்பீடு எடுப்பவர்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. எனவே அவர்கள் அந்த 20,000 ரூபாய் தொகை மட்டுமே செலுத்தினாலே போதும்.

மலிவாகும் காப்பீடு: மருத்துவ காப்பீடு மீதான ஜிஎஸ்டி நீக்கத்தின் மூலம் ஒரு சராசரி குடும்பம் 3,600 ரூபாயை மிச்சப்படுத்துகிறது. எனவே மருத்துவ காப்பீடுகள் மலிவு விலை கொண்டதாக மாற உள்ளன. இது மிடில் கிளாஸ் மக்களையும் இளைஞர்களையும் மருத்துவ காப்பீடு திட்டங்களை நோக்கி நகரச் செய்யும் . நம் நாட்டில் தற்போது 20 சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்கள் தான் தனியார் மருத்துவ காப்பீடு திட்டங்களின் மூலம் காப்பீடு பெற்று இருக்கின்றனர்.

மருத்துவ செலவுகள்: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி வரி விலக்கின் மூலம் அதிகமானவர்கள் ஒரு குறைந்த காப்பீடு தொகைக்காவது தனியார் நிறுவனங்கள் மூலம் மருத்துவ காப்பீடு பெறுவதற்கு முன் வருவார்கள். இது அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மருத்துவ காப்பீடு என்பது வசதி படைத்தவர்களுக்கு தான் என்ற நிலையில் இருந்து அனைவருக்குமானதாக மாறும். இதே போல ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கான ஜிஎஸ்டியும் நீக்கப்பட்டுள்ளது, எனவே ஆயுள் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையும் குறைந்துள்ளது. இதன் மூலம் அதிகமான குடும்ப தலைவர்கள் ஆயுள் காப்பீடு எடுக்க முன்வருவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+