டெல்லி: மாணவர்கள் மற்றும் அரசு வேலை ஆர்வலர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் கான் சார் என்ற ஆசிரியர் பைசல் கான். Khan GS Research Centre என்ற பிரபலமான யூடியூப் சேனலின் உரிமையாளர் கான் சார். இவரது சேனலுக்கு 2.13 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
தனது பள்ளி பருவத்தில் ஒரு தரமான பென்சில் வாங்குவதற்கு சிரமப்பட்ட கான் சார் இப்போது யூடியூப் சேனல் வாயிலாக மாதந்தோறும் சாரசரியாக ரூ.10-12 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார். பல மாணவர்களுக்கு அரசு வேலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு ஒளி விளக்காக கான் சார் உள்ளார்.

கான் சார் என்று மாணவர்களால் அன்போடு அழைக்கப்படும் கானின் வெற்றி பயணம் பல சிரமங்களை தாண்டி சாத்தியமாகி உள்ளது. கான் குழந்தை பருவம் கொடூரமான வறுமையில் கழிந்தது. தரமான பென்சிலை கூட வாங்க முடியாத அளவுக்கு கஷ்ட சூழ்நிலை மற்றும் கல்வியிலும் சராசரியாக இருந்துள்ளார். கான் சாரும் எல்லோரும் போலவே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். இந்திய ராணுவத்திற்கான நுழைவு தேர்வு எழுதினார் ஆனால் வெற்றிபெறவில்லை. பொறியல் மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகளை எழுதினார். இந்த முறை மருத்துவ ரீதியாக தகுதியற்றவர் என்பதால் தோல்வியடைந்தார்.
இந்த சூழ்நிலையிலன் கான் சாரின் நண்பர் ஹேமந்த் அவரிடம் கற்பிக்கும் (டியூஷன்) எடுக்கும் யோசனையை தெரிவித்தார். இது கான் சாருக்கு சரியாகப் பட்டது. இதனையடுத்து ஒரே ஒரு மாணவருடன் இந்த தொழிலை தொடங்கினார். கான் சார் ஆரம்பத்தில் தனது வீட்டில் அந்த மாணவருக்கு பாடம் சொல்லி கொடுத்தார், இவரிடம் படித்த அந்த மாணவர் பள்ளியில் டாப்பராக உயர்ந்தார். இது கான் சாருக்கு உற்சாகத்தை கொடுத்தது மற்றும் பல மாணவர்களுக்கும் கற்பிக்கத் தொடங்கினார். மாணவர்களுக்கு புத்திசாலித்தனமாக கான் சார் கற்பித்தார். படிப்படியாக நிறைய மாணவர்கள் அவரது வகுப்புகளில் சேரத் தொடங்கினர்.

கான் சார், அரசு வேலை ஆர்வலர்களுக்காக ஒரு கோச்சிங் மையத்தை தொடங்கினார். பல மாணவர்களுக்கு அரசு வேலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு அவர் வழிகாட்டியாக இருந்தார். அவரது புகழ் பரவியது. இந்த சூழ்நிலையில் சிலர் கான் சாரின் பயிற்சி மையத்தை சட்டவிரோதமாக கைப்பற்ற முயன்றனர். இதனால் அவர் முதலில் மனமுடைந்த போனார். பின் தனது முன்னாள் மாணவர்களின் உதவியுடன் ஒரு புதிய பயிற்சி அமைப்பை தொடங்கினார். ஆனாலும் அவரது தடைகள் முடிவடைந்தது விடவில்லை, கான் சாரின் புதிய பயிற்சி மையத்தில் சில குண்டர்கள் வெடிகுண்டுகளை வீசினர்.
UPSC தேர்வுக்காக படிப்பவர்களிடம் கான் சார் குறைவான கட்டணம் வசூலித்தது போட்டியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தான் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்தது. தொடர்ந்து சிரமங்களை சந்தித்தாலும் கான் சார் கலங்கவில்லை. கொரோனா வைரஸ் காலத்தில், ஆன்லைனில் கற்பித்தலை தொடங்கிய பிறகு கான் சார் இதுவரை இல்லாத புகழை பெற்றார். கான் சார் தனது யூடியூப் சேனல் வாயிலாக மாதந்தோறும் பல லட்சங்கள் சம்பாதிக்கிறார். இன்று கான் சாரின் சொத்து மதிப்பு ரூ.5 கோடியாகும்.


Click it and Unblock the Notifications