விஜய் மல்லையா செய்த வங்கி மோசடியைத் தாண்டி இந்திய மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வங்கி மோசடி என்றால் வைர வியாபாரிகளாக நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி செய்தது தான். வங்கிகளில் குறிப்பாக அரசு வங்கிகளில் போலியான கணக்குகளைக் காட்டியும், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை வாங்கி கணக்குக் காட்டியும் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே ஓடினர். அவர்களைக் கைது செய்து இந்தியாவுக்கு நாடுகடத்த மத்திய அரசு வருடக் கணக்கில் முயற்சி செய்து வரும் வேளையில் தற்போது முக்கிய திருப்பமாக மெஹுல் சோக்சி கைது செய்யப்பட்டு உள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த பெரும் நிதி மோசடியில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் வைர வியாபாரியான மெஹுல் சோக்சி, பெல்ஜிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெஹுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி கைது செய்யப்பட்ட உடனேயே இந்தியாவை விட்டுத் தப்பித்து இரவோடு இரவாக குடும்பத்துடன் இந்திய அரசால் நாடு கடத்த முடியாத இடத்திற்கு குடியெர்ந்தனர். இசற்காக மொத்த குடும்பத்திற்கும் முன்கூடிய முதலீட்டு அடிப்படையில் குடியுரிமை பெற்று இருந்தனர்.
மெஹுல் சோக்சி, அவரது நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள், வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து, முறையான வங்கி நடைமுறைகளைப் பின்பற்றாமல் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக லெட்டர்ஸ் ஆஃப் அண்டர்டேக்கிங் (LoUs) மற்றும் ஃபாரின் லெட்டர்ஸ் ஆஃப் கிரெடிட் (FLCs) ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் வங்கிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் பல வருட முயற்சிக்குப் பின்பு மெஹுல் சோக்சி கைது நடவடிக்கை நடந்துள்ளது, இந்திய அரசு அவரை நாடு கடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் முக்கியமான கட்டமாக இந்த கைது நடவடிக்கையைப் பார்க்கப்படுகிறது.
சுமார் 14,000 கோடி ரூபாய் வரையிலான தொகை மெஹுல் சோக்சி மோசடி செய்துள்ளார். இதற்காக இவருக்குத் தொடர்பான பல சொத்துக்கள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டாலும், கடன் மோசடி தொகை மற்றும் அதன் மூலம் வங்கிகள் எதிர்கொண்ட இழப்புகளை முழுமையாக வசூலிக்கப்படவில்லை.
மெஹுல் சோக்சி கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மும்பை நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் தான். இந்த பிடிவாரண்டுகள் 2018 மே 23 மற்றும் 2021 ஜூன் 15 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் இந்திய அரசின் கோரிக்கையின் அடிப்படையில் பெல்ஜிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த கைது நடவடிக்கை அரங்கேறியுள்ளது.
மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் இருப்பதை அறிந்தவுடன், இந்திய அதிகாரிகள் உடனடியாக பெல்ஜிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் தொடங்க வலியுறுத்தினர்.
மேலும், மெஹுல் சோக்சி சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக அவர் பெல்ஜியத்தில் இருந்து சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், இவரைக் கைது செய்யும் முயற்சி 2018ஆம் ஆண்டில் இருந்து நடந்து வருகிறது. இதற்காக அமலாக்க இயக்குனரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) ஆகிய இரு அமைப்புகளும் 7 வருடமாகப் போராடி வருகிறது.


Click it and Unblock the Notifications