சாப்பாட்டுக்கு கூப்பன் கொடுத்தா மளிகை பொருள் வாங்குறீங்க!! – உடனே வேலையை விட்டு தூக்கு!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: உணவுக்காக வழங்கப்பட்ட வவுச்சர்களை கொண்டு வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிய வாங்கிய குற்றச்சாட்டில் மெட்டா நிறுவனம் சுமார் 24 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களின் தாய் நிறுவனம்தான் மெட்டா. இந்த நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும் 24 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் வழங்கிய சலுகைகளை தவறாக பயன்படுத்தியதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

சாப்பாட்டுக்கு கூப்பன் கொடுத்தா மளிகை பொருள் வாங்குறீங்க!! – உடனே வேலையை விட்டு தூக்கு!!

உதாரணமாக ஆண்டுக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்களை ஊதியமாக பெறக்கூடிய ஒரு ஊழியர் தனக்கு நிறுவனம் வழங்கிய உணவுக்கான வவுச்சர்களை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான பொருட்களையும் மளிகை சாமான்களையும் வாங்கி இருப்பதை மெட்டா நிறுவனம் விசாரணை மூலம் கண்டறிந்துள்ளது.

மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் அலுவலகம் தங்களுக்கு வழங்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்துவதாக மேல் இடத்திற்கு புகார் சென்றுள்ளது. இதனை அடுத்து மனிதவள துறை மூலம் விசாரணை நடத்தப்பட்டதில் சில உண்மைகள் வெளிவந்துள்ளன . இதன்படி ஊழியர்கள் சிலர் அலுவலகத்தில் வந்து பணிபுரியாமலேயே தங்களுக்கான உணவு வவுச்சர்களை பயன்படுத்தி உணவினை வீட்டுக்கு வரவழைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு உணவுக்கான தொகையாக ஒரு நாளைக்கு 70 டாலர்களை வழங்குகிறது . இதனை சில ஊழியர்கள் உணவுக்காக பயன்படுத்தாமல் வீட்டுக்கு தேவையான சலவை பவுடர், டூத் பேஸ்ட் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பயன்படுத்தியுள்ளனர். இதனை கண்டறிந்த மெட்டா நிறுவனத்தின் மனித வளத்துறை இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட 24 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளது. சில ஊழியர்களை நேரில் அழைத்து மீண்டும் இது போன்ற முறைகளில் ஈடுபடக்கூடாது என கண்டித்துள்ளது.

மார்க் ஜக்கர்பர்குக்கு சொந்தமான மெட்டா நிறுவனத்தில் ஆரம்ப கால முதலே ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பெரிய அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு அங்கேயே கேண்டீன் மூலம் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சிறு சிறு நகரங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நாள்தோறும் காலை உணவுக்கு 20 டாலர்கள் , மதிய மற்றும் இரவு நேர உணவுக்கு தலா 25 டாலர்கள் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

ஊழியர்கள் இதனை கொண்டு ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட தளங்கள் வழியே உணவினை ஆர்டர் செய்யலாம். ஆனால் சில ஊழியர்கள் இந்த கிரெடிட்களை பயன்படுத்தி அலுவலகத்திற்கு வராமலேயே வீட்டில் இருந்தே உணவினை ஆர்டர் செய்ததும், மளிகைபொருட்களை வாங்கி இருப்பதும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+