ஒவ்வொரு ரயில் பயணமும் பல அனுபவத்தை கொடுக்கும், ஆனால் ஒரு சிலருக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்துவிடும். இப்படி பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு அதிர்ச்சி கலந்து பயணமாக அமைந்ததுள்ளது.
பொதுவாக வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணிகளுக்கு உணவு அளிப்பது வழக்கம், இந்த உணவு குறித்து பலரும் பாராட்டியும், விமர்சனம் செய்தும் பல பதிவுகள் சமுக வலைத்தளத்தில் நிரம்பியுள்ளது. இதில் பெரும்பாலான பதிவுகள் உணவின் தரத்தில் மட்டுமே தொடர்பு கொண்டதாக இருந்தது.

ஆனால் தற்போது சமர்த் கொய்டல் என்ற பயணி வெளியிட்ட வீடியோ பதிவு முற்றிலும் மாறுப்பட்டது. சமர்த் கொய்டல் (Samarth Koidal) என்பவர் பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயண செய்துள்ளார்.
இந்த பயணத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவில் மெட்டல் போல்ட் இருந்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ, புகைப்படத்தை தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டது மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மக்கள் கேள்விகள் எழுப்ப துவங்கியுள்ளனர்.
மேலும் சமர்த் கொய்டல் தனது டிவிட்டர் பதிவில் IRCTC, ரயில்வே அமைச்சகம், ரயில்வே சேவா, ரயில் கம்பிளெயின்ட் போன்ற கணக்குகளை டேக் செய்து புகார் அளித்துள்ளார். இந்த பதிவு கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
மேலும் இந்த பதிவுக்கு தற்போது IRCTC அந்த பயணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது மட்டும் அல்லாமல், இந்த புகார் சீரியஸாக எடுத்துக்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
இதேபோல் சமையல் அறையில் இருப்பவர்களுக்கு செயல்முறையை பாலோ செய்ய உத்தரவிட்டப்பட்டு உள்ளதாக தெரிவிள்ளது.
இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பலரும் ரயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்திய ரயில்வே துறை பிரீமியம் ரயில் சேவையாக மக்களுக்கு வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்திருக்கும் வேளையில், இத்தகைய ரயிலேயே இதுப்போன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் டூ பெல்காவி வந்தே பாரத் ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இயங்குகிறது.
பெங்களூரில் இருக்கும் KSR ரயில் நிலையத்தில் இருந்து பெலகாவி செல்லும் இந்த ரயிலில் ஏசி சேர் கார் கட்டணம் 1,630 ரூபாய். இதுவே எக்ஸிகியூட்டிவ் சேர் கார் சீட்டாக இருந்தால் இதற்கான கட்டணம் 2,955 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம் உணவு மற்றும் ஜிஎஸ்டி (GST) ஆகியவற்றும் அடங்கும்.


Click it and Unblock the Notifications
