இந்திய ரீடைல் சந்தையை கட்டியாள வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியும், அவருடைய மகள் ஈஷா அம்பானியும் மாபெரும் திட்டத்தை தீட்டி வருவது மட்டும் அல்லாமல் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல அடுத்த சில வாரத்தில் 20000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரட்டும் இலக்குடன் இயங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் இயங்கி வரும் ஜெர்மனி நாட்டின் மொத்த விலை விற்பனை கடைகளாக மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகத்தை மொத்தமாக கைப்பற்றி, ரீடைல் துறையில் மட்டுமே இயங்கி வந்த ரிலையன்ஸ் ரீடைல் மொத்த விலை விற்பனையில் இறங்கி இந்தியாவில் இருக்கும் அனைத்து ரீடைல் கடைகளுக்கும் தேவையான பொருட்களை சப்ளை செய்ய துவங்கியது.

இந்த மெட்டோ வர்த்தகத்தை கைப்பற்றிய சில நாட்களில் அதிகப்படியான வர்த்தக மாற்றத்தை செய்த ஈஷா அம்பானி நிர்வாகம் B2B பிரிவில் அதிகப்படியான வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்றது. இதை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல B2B பிரிவுக்கு மட்டுமே இயங்கி வந்த மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகம் தற்போது ரீடைல் வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்பட்டு உள்ளது.
ஆம், இனி ரீடைல் வாடிக்கையாளர்களும் மெட்ரோ கடைகளில் ஷாப்பிங் செய்ய முடியும், மெட்ரோ ஜெர்மனி நிறுவனமாக இருந்த காரணத்தால் FDI விதிமுறைகள் படி ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக B2B பிரிவில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். தற்போது ரிலையன்ஸ் கைப்பற்றியது மூலம் இந்திய நிறுவனமாக மாறியதால் ரீடைல் வாடிக்கையாளர்களுக்கும் மெட்ரோ கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் தற்போது மெட்ரோ கடைகளில் ஹோல்சேல் மற்றும் ரீடைல் வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிக்கிறது. இதன் மூலம் ஹோல்சேல் விலையிலேயே ரீடைல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க முடியும். ரிலையன்ஸ் ரிடைல் அடுத்த 2 வருடத்திற்கு மெட்ரோ பிராண்ட் பெயரில் தான் இயங்கும், சமீபத்தில் பட்டியாலாவில் புதிய மெட்ரோ கடைகள் திறக்கப்பட்டது.
மேலும் மெட்ரோ பிராண்ட் வாயிலாக மளிகை கடைகள், சிறிய கடைகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் என அதிகப்படியான அளவில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களை இணைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மெட்ரோ பிராண்டு மூலம் ரிலையன்ஸ் தனது நியூ காமர்ஸ் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகத்தை மேம்படுத்த 40க்கும் அதிகமான டிராக் ஸ்டோர்கள் அதாவது கிடங்குகளை திறக்க திட்டமிட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications