சாட்டையை சுழற்றும் Microsoft.. சம்பளத்தில் புதிய மாற்றம்.. டெக் ஊழியர்கள் ஷாக்.. இனி இதுதான் நியூ நார்மல்..!!

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் ஏற்கனவே 60000 ஊழியர்களை VRS முறையில் வெளியேற்றத் திட்டமிட்டு இருக்கும் வேளையில், இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தக பிரிவான Azure கிளவுட் பிரிவில் புதிய ஊதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு ஊழியர்களின் செயல்திறனுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் மாறுபடும். அதாவது சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்குச் சம்பளத்தைத் தாண்டி பங்குகள் (Stock Awards) வழங்கப்பட உள்ளதாக Azure கிளவுட் பிரிவை வழிநடத்தும் அருண் உலாகராட்சகன் தெரிவித்துள்ளார்.

சாட்டையை சுழற்றும் Microsoft.. சம்பளத்தில் புதிய மாற்றம்.. டெக் ஊழியர்கள் ஷாக்.. இனி இதுதான் நியூ நார்மல்..!!

அதாவது இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அசூர் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களுடைய ஒப்பந்தத்தைத் தாண்டி, கூடுதல் பங்குகள் வழங்கப்படும். இதே நேரத்தில் சரியாக பணியாற்றாத ஊழியர்களுக்கு தங்களுடைய மேனேஜர்கள் சந்திக்க நேரிடும் கடுமையான கட்டமைப்பு கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஏஐ வந்ததால் நிறுவனங்களிலும், நிர்வாகத்திலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் வேளையில், டெக் துறையில் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்திலும் பெரும் மாற்றம் வர துவங்கியுள்ளது.

Also Read

இதற்கு முன்பு வர்த்தகம் மற்றும் வர்த்தக முறையில் மட்டுமே மாற்றங்கள் வந்த நிலையில், முறை முறையாகச் சம்பளத்திலும், சம்பள முறையிலும் மாற்றங்கள் வர துவங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

ஒட்டுமொத்த ஏஐ துறை வளர்ச்சிக்கு கிளவுட் சேவை மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இப்பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அதிகப்படியான திறன்களைக் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே மைக்ரோசாப்ட் ஏஐ துறை வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் வேளையில் இந்நிறுவனம் தனது Azure கிளவுட் சேவையைப் பிரதானமாக மாற்ற வேண்டும் என இலக்கு வைத்துள்ளது.

ஏஐ மாடல்களை உருவாக்கவும், இயக்கவும், சோதனை செய்யவும் அதிகப்படியான கம்பியூட்டிங் கட்டமைப்பு தேவைப்படும் நிலையில், கிளவுட் கம்பியூட்டிங் மிகவும் அவசியமானதாகவும் உள்ளது. இதேபோல் கூகுள், அமேசான் உடனான வர்த்தக போட்டியை சமாளிக்கவும், தொடர்ந்த முதன்மையானதாக இருக்கவும் Azure தனது வளர்ச்சியை வேகப்படுத்த ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த முயற்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள் கூடுதல் அங்கிகாரம் வழங்கப்பட உள்ளது.

இப்புதிய சம்பள கட்டமைப்பில் Azure பிரிவில் எதிர்பார்த்த அளவுக்குப் பணியாற்றாத ஊழியர்கள் தொடர்ந்து மேனேஜர்களின் கண்காணிப்பில் இருப்பார்கள், செயல்திறன் தொய்வுக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்க வேண்டும், தேவைப்படுமாயின் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க வாய்ப்புள்ளது.

இப்புதிய பங்கு ஒதுக்கீடு மற்றும் ஊழியர்கள் கண்காணிப்பு குறித்து Azure பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் அருண் உலாகராட்சகன் ஊழியர்களுக்கு ஈமெயில் மூலம் தெரிவித்துள்ளார். இதேபோல் எவ்வளவு பங்கு ஒதுக்கீடு கிடைக்கும் என்பதில் எவ்விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ஏஐ தொழில்நுட்பம் காரணமாக பணிநீக்கம் தொடர்ந்து நடத்து வரும் வேளையில் தற்போது சம்பளத்திலும் கைவைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+