மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "Windows" இயங்குதளத்தின் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 2-வது நாளாக இன்றும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கணினியின் பயன்பாடு ஸ்தம்பித்துப் போய்யுள்ளது. Windows பயன்படுத்தும் பல பயனர்களுக்கு "ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்" என்ற Error மெசேஜ் காண்பிக்கப்படுகிறது. மைக்ரோசாஃப்டின் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் மற்றும் Crowdstrike நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது.
Windows அப்டேட்டில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறுகளின் தாக்கம் பல்வேறு துறைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக விமான நிலையங்கள், ஐடி தொழில்நுடப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறை, மருத்துவ சேவைகள், ஊடகங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள் பங்குச்சந்தை செயலிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த தொழில்நுட்ப கோளாறு பாதித்துள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் மற்றும் Crowdstrike நிறுவனத்தின் பங்குகள் சரிவைக் காண தொடங்கியுள்ளது.

இந்த பெரிய அளவிலான செயலிழப்பு காரணமாக உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் Azure கிளவுட் சேவைகள் மற்றும் மைக்ரோசாப்ட் 365 பயன்பாட்டு தொகுப்புகளில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து மைக்ரோசாப்ட் பங்குகள் 1 சதவீதம் சரிந்துள்ளன. CrowdStrike பங்குகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவை 11 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன.
இன்று சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில், CrowdStrike பங்குகள் விலை 18.67 சதவீதம் குறைந்தன. மைக்ரோசாப்ட் பங்குகள் விலை 2.5 சதவீதம் வரை குறைந்தது. தற்போது CrowdStrike-இன் பங்குகள் 304.96 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. விமான நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை பாதித்த இந்த உலகளாவிய ஐடி சிக்கலுக்கு, மைக்ரோசாப்ட் விண்டோஸுடன் சிக்கலை உருவாக்கிய CrowdStrike-இன் செக்யூரிட்டி அப்டேட் தான் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனைச் சேர்ந்த RNS செய்திகள் சேவை, தற்போது தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக செய்தி வெளியிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழுக்கள் இந்த சேவையை மீண்டும் மீட்டெடுக்க பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பத்திர வர்த்தகம் மற்றும் பிற சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்தப் பிரச்சனை தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் முக்கிய உலகளாவிய கட்டமைப்புகளை பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிரச்சனையை விரைவாக தீர்த்து, இதுபோன்ற எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பங்கு விலை வீழ்ச்சியின் போது உணர்ச்சிகளுக்கு ஆட்படுவது இயல்பு என்றாலும், அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் சிந்தித்து செயல்படுவார்கள். பங்கின் வீழ்ச்சி முதலீட்டாளர்களுக்கு சற்று கவலை அளிக்கும் விதமாக இருந்தாலும், அனைத்து சிக்கல்களையும் சரி செய்த பின்னால் பங்கின் மதிப்பு உயருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications