மிடில் கிளாஸ் மக்கள் தான் டார்கெட்-ஆ.. GST பெரிய சுமை..? புட்டு புட்டு வைக்கும் நிபுணர்..!!

இந்தியாவில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஒரு சிறிய கார், அதுவும் முதல் கார் வாங்குவது என்பது அவர்களின் வாழ்வின் முக்கியமான பொருளாதார முன்னேற்றத்தை குறிக்கும் ஒரு விஷயம். ஆனால், இந்தியாவில் மாருதி சுசூகி ஆல்டோ போன்ற ஒரு அடிப்படை காரை வாங்குவதற்கு கூட அதிகப்படியான வரிச்சுமை காரணமாக பெரும் தடையாக உள்ளது.

இதுக்குறித்து டிவிட்டவில் பிரபல நிதி ஆலோசகரான Fundamental Investor முக்கியமான பதிவை செய்துள்ளது. இந்த பதிவில் அரசின் வரி சுமையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது மட்டும் அல்லாமல் 10 சதவீதத்திற்கும் அதிகமாக வரி வசூலிக்கும் அனைத்து இடத்திலும் அரசு மக்களை ஒரு பொருட்டாக பார்ப்பது இல்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

மிடில் கிளாஸ் மக்கள் தான் டார்கெட்-ஆ.. GST பெரிய சுமை..? புட்டு புட்டு வைக்கும் நிபுணர்..!!

Fundamental Investor பெயர் கொண்ட டிவிட்டர் கணக்கில் செய்யப்பட்ட பதிவில் "ஒரு நடுத்தர வர்க்க நபர் தனது முதல் காராக ஆல்டோவை வாங்க முடிவு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். ஏற்கனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் 15 முதல் 30 சதவீதம் வரையிலான தொகையை வருமான வரியாக செலுத்துகிறார். ஆனால், கார் வாங்க ஷோரூமிற்கு செல்லும்போது தான் அவருக்கு மத்திய அரசு மீண்டும் தனது பாக்கெட்டில் கைவைப்பதை உணர்கிறார்."

ஒரு மாருதி சுசூகி ஆல்டோவின் அடிப்படை விலை ரூ.3,87,596 ஆகும். ஆனால், இது வெறும் தொடக்கப்புள்ளி மட்டுமே, இக்காருக்கு 28 சதவீத GST வரி உள்ளது, இதை தொடர்ந்து 1 சதவீத செஸ் வரியும் உள்ளது. இதனால் 3.87 லட்சம் காரின் விலையின் மீது 29 சதவீத வரிக்கு கூடுதலாக ரூ.1,11,903 சேர்க்கப்படுகிறது.

இதோடு நிற்கவில்லை, 29 சதவீத வரி செலுத்திய பின்பு கார் வாங்கினால் மட்டும் போதாதது, சாலையில் இக்காரை ஓட்ட வேண்டும் என்றால் சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும், இதற்கு ரூ.94,248. இங்கேயும் நிற்கவில்லை காருக்கு பாதுகாப்பு, மூன்றாம் தரப்பு பாதுகாப்பு என காப்பீட்டு தொகையாக ரூ.30,890 செலுத்த வேண்டும்.

இப்படி மொத்தமாக ஒரு மிடில் கிளாஸ் மக்கள் வருமான வரி செலுத்திய பிறகும், கார் நிறுவனத்திற்கு ரூ.3.87 லட்சம் செலுத்தி, அரசாங்கத்திற்கு GST மற்றும் பிற கட்டணங்களாக ரூ.2.06 லட்சம் செலுத்துகிறது. ஒரு கார் வாங்கும் போது கிட்டத்தட்ட 53 சதவீதத்தை அரசாங்கம் பெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் எப்படி அடுத்தக்கட்டத்திற்கு சொல்ல முடியும் என்ற கேள்வியை இந்த நிதி ஆலோசகர் முன்வைக்கிறார்.

மத்திய அரசு அடிப்படை கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கட்டாயம் மறுஆய்வு செய்ய வேண்டும், 29 சதவீதம் வரி என்பது ஏற்புடையது அல்லது. அடிப்படை கார்களின் விற்பனையில் அரசுகள் 10 சதவீதத்திற்கும் அதிகமான வரி வருமானத்தை பெற கூடாது. 10 சதவீதத்திற்கும் அதிகமான வரி என்பது அரசு மக்களை ஒரு பொருட்டாக பார்ப்பது இல்லையா என்று கேள்வியை எழுப்புகிறது.

2017-இல் அறிமுகப்படுத்தப்பட்ட GST, இந்தியாவின் வரி அமைப்பில் பெரும் மாற்றத்தை செய்தது, முன்பு, கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT), மற்றும் ஒக்ட்ராய் போன்ற பல்வேறு வரிகள் கார்களின் விலையை சிக்கலாக்கி, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் விலை வேறுபாடுகள் இருந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்தின் மூலம் இது சீர்படுத்தப்பட்டது.

ஆனால், எல்லா கார்களுக்கும் ஒரே GST விகிதம் இல்லை. கார்களின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வரி விகிதங்கள் மாறுபடுகின்றன. இந்தியாவில் கார்களுக்கான GST வரி எப்படி விதிக்கப்படுகிறது.

சிறிய பெட்ரோல் கார்கள் (1200 சிசி வரை, 4 மீட்டர் நீளத்திற்கு குறைவானவை): 28% GST + 1% செஸ் = 29%

சிறிய டீசல் கார்கள் (1500 சிசி வரை, 4 மீட்டர் நீளத்திற்கு குறைவானவை): 28% GST + 3% செஸ் = 31%

நடுத்தர அளவு கார்கள் (1200 சிசி பெட்ரோல் அல்லது 1500 சிசி டீசல் மேல்): 28% GST + 15% செஸ் = 43%

ஆடம்பர கார்கள் (1500 சிசி மேல்): 28% GST + 20% செஸ் = 48%

SUVகள் (1500 சிசி மேல், 4 மீட்டர் நீளத்திற்கு மேல்): 28% GST + 22% செஸ் = 50%

எலக்ட்ரிக் வாகனங்கள் (அனைத்து திறன்களும்): 5% GST, செஸ் இல்லை = 5%

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+