ஒருவர் நம்மை இளக்காரமாக பேசும் போது, அவர் முன் நாம் சாதித்து காட்ட வேண்டும் என்ற வேகம் எழும், அதற்கான வாய்ப்புகள் அமையும் போது அந்த வேகத்தை நாம் செயலில் காட்டினால் பெரிய உயரத்தை அடையலாம். அதற்கு நல்ல உதாரணம் பெங்களூரில் மிகவும் பிரபலமான ஹோட்டலான ராமேஸ்வரம் கபேவின் உரிமையாளரும் பெண் தொழிலதிபருமான திவ்யா ராவ்.
திவ்யா ராவ் அடிப்படையிலேயே நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர், வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருக்க இதை விட பெரிய காரணம் தேவையில்லை. திவ்யா ராவால் ரூ.10 செலவு செய்வது கூட கடினமான விஷயமாக இருந்தது.

இருப்பினும் படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் 21 வயதில் CA ஆனார். இதை தொடர்ந்து நிதி மற்றும் மேலாண்மை படிப்புக்காக அகமதாபத் ஐ.ஐ.எம். சென்றார். அதுவரை அவரது வாழ்க்கை இயல்பான ஒன்றாக இருந்தது.
அகமதாபாத் ஐ.ஐ.எம்.யில் பேராசிரியர் ஒருவர் பாடம் எடுக்கும் போது, இந்தியர்கள் உணவகங்களை நடத்துவதில் திறமையானவர்கள் அல்ல. நாம் மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் மற்றும் கே.எஃப்.சி.யின் வர்த்தக செயல்பாடுகளை படிக்கிறோம், எந்தவொரு இந்திய உணவகங்களின் வர்த்தகத்தை பற்றி அல்ல என்று தெரிவித்தார்.
பேராசிரியரின் இந்த பேச்சு திவ்யா ராவின் மனதிற்குள் பெரிய வலியை கொடுத்தது. இதனை மாற்றி காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் திவ்யா ராவுக்கு ஏற்பட்டது. இருப்பினும் நல்ல சம்பளத்தில் ஒரு வேலையில் பணியாற்றினார்.
அந்த சூழலில் உணவுத்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் இருந்தும் ஓட்டல் தொழிலில் தோல்வியடைந்த ராகவ், மீண்டும் ஓட்டல் தொழில் தொடங்க விரும்பினார். அதற்காக ஆலோசனைகள் கேட்பதற்காக திவ்யா ராவை ராகவ் சந்தித்தார்.
அப்போது திவ்யா ராவுக்கு, இந்தியர்களுக்கு உணவகம் நடத்த திறமை கிடையாது என்ற பேராசிரியரின் இளக்காரமான மற்றும் பயமுறுத்தும் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. இதனையடுத்து பேராசிரியரின் கூற்றை மாற்றிக்காட்ட இதுதான் நமக்கு வாய்ப்பு என்று முடிவு செய்த திவ்யா ராவ் பார்த்து கொண்டிருந்த வேலையை விட்டார். ராகவுடன் ஓட்டலில் பார்ட்னராக திவ்யா ராவ் இணைந்தார்.
பெங்களூரில் ஜே.பி. நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலை தொடங்கினார். நெய் இட்லி, தோசை போன்ற தென்னிந்திய உணவுகளை விற்பனை செய்தார். ஆரம்பத்தில் வியாபாரம் சுமாராக இருந்தது. ஆனால் பின்னர் வியாபாரம் சூடு பிடித்தது. கஃபேக்கு வந்த வாடிக்கையாளர்களில் 95 சதவீதம் பேர் உணவை புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இதன் மூலம் ராமேஸ்வரம் கஃபே அந்நகரம் முழுவதும் பேமஸ் ஆனது.
ராமேஸ்வரம் கஃபேவில் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அதிகாலை 1 மணி வரை மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். புதிய பொருட்கள் பயன்படுத்துதல், தரமான சேவை போன்றவை ராமேஸ்வரம் கஃபேவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து சென்றது. இப்போது பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவுக்கு 4 கிளைகள் உள்ளன.
முதல் ஹோட்டல் 10க்கு 10 கடையில் துவங்க்கப்பட்டு பெரிய வெற்றியை அடைந்தது. ஆனால் பிறகு வந்த கடைகள் பெரிது என்ற போதிலும் பிற ரெஸ்டாரண்ட்களை ஒப்பிட்டால் சின்னதாகவே உள்ளது. இந்த 4 கிளைகள் மூலம் நாள் ஒன்றுக்கு மொத்தம் 7,500 ஆர்டர்களை செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.4.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
ராமேஸ்வரம் கஃபேவில் தற்போது 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். துபாயில் மற்றும் ஹைதராபாத்தில் கிளைகள் திறக்கிறார்கள். திவ்யா தனது தொழில் பார்ட்னர் ராகவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது கஃபேவுக்கு ராமேஸ்வரம் கஃபே என்று திவ்யா ராவ் பெயரிட்டார். அகமதாபாத்தில் படித்து விட்டு, தெருவில் இட்லி விற்பனை செய்ததற்காக தன்னை கேலி செய்தவர்களுக்கு இன்று ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்து தனது உயர்வால் பதிலடி கொடுத்துள்ளார் திவ்யா ராவ்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications