பால், அரிசி, கோதுமை மாவு, பருப்பு மற்றும் தானியங்கள் போன்ற மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் 5-15% அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு காரணமாக நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் டிமாண்ட் குறைந்து வர்த்தகம் பாதிக்கத் தொடங்கும் என்று கூறியுள்ளனர். இந்த விலை உயர்வு ஆரம்பக் கட்டமாக இருக்கும் வேளையில் விரைவில் இது மோசமான நிலையை அடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு என்ன காரணம்.?
அத்தியாவசிய பொருட்கள்
அத்தியாவசிய பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, வலுவான ஏற்றுமதி தேவை, மொத்த கோதுமை இருப்புகளின் ஆப்லோடிங் செய்வதில் தாமதம் மற்றும் விநியோக தடைகள் ஆகியவை பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டு முக்கியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பால் விலை
கடந்த 15 மாதங்களில் பால் விலை 14% உயர்ந்துள்ளது, இதன் மூலம் கட்டாயம் மக்கள் வாங்குவது குறையும் என இந்தியப் பால் சங்கத்தின் தலைவரும், அமுல் நிறுவனத்திற்குச் சொந்தமான குஜராத் கூட்டுறவு பால் மார்கெட்டிங் கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான ஆர்.எஸ்.சோதி கூறினார்.
அரிசி விலை
உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி மற்றும் வலுவான ஏற்றுமதி தேவை ஆகியவற்றின் மூலம் கடந்த ஒரு மாதத்தில் பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசியின் விலைகள் 10-15% அதிகரித்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாகப் பாகிஸ்தான் நாட்டின் அரிசி உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு இந்திய பாஸ்மதிக்கு வலுவான ஏற்றுமதி டிமாண்ட் உருவாகி விலை அதிகரித்துள்ளது.
பொருட்களின் விலை
பொதுவாக விற்பனை பொருட்களின் விலையில் விலை உயர்வுக்கான Buffer எப்போதும் இருக்கும், இந்த Buffer அளவீட்டைத் தாண்டி அதன் விலை உயரும் போது பொருட்களின் விற்பனை விலையில் இதன் தாக்கம் அதாவது விலை உயர்வு எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.
சில்லறை விற்பனையாளர்கள்
கடந்த ஒரு மாதத்தில் பால், அரிசி, கோதுமை மாவு, பருப்பு மற்றும் தானியங்களின் விலையில் ஏற்பட்ட மாற்றம் பொருட்களின் விற்பனை விலையில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளதாகச் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். அடுத்த சில வாரத்தில் பிற முக்கியமான நுகர்வோர் பொருட்களின் விலையும் அதிகரிக்க உள்ளதாகவும் ரீடைல் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
சில்லறை பணவீக்கம்
ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வாலும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வாலும் இந்தியாவின் வருடாந்திர சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.72 சதவீதமாக இருந்து ஜனவரியில் 6.52% ஆக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
பணவீக்க உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு மக்காச்சோளம் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. தற்போது மக்காச்சோளம் சுமார் 60% அடிப்படை வரியைப் பெற்று வருகிறது, அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளும் மீண்டும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு விலை பணவீக்கம்
நுகர்வோர் விலைக் குறியீட்டில் கிட்டத்தட்ட 40% பங்கு வகிக்கும் உணவு விலை பணவீக்கம் முந்தைய மாதத்தில் 4.19% லிருந்து ஜனவரி மாதத்தில் 5.94% ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தானியங்கள், பால், கோதுமை, அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளது தான். தானிய வகைகள் மீதான பணவீக்கம் டிசம்பரில் 13.79% ஆக இருந்த நிலையில் ஜனவரியில் 16.12% ஆக அதிகரித்துள்ளது.
பருப்பு விலை
இந்திய விற்பனை சந்தையில் புதிய பயிர் வரத்து அதிகமாக இருந்தாலும், பருப்பு போன்ற முக்கியப் பொருட்களின் விலை 10% முதல் 15% வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு உற்பத்தியில் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும் என வர்த்தகம் எதிர்பார்க்கும் நிலையில், துவரம் பருப்பு விலை அதிகரித்துள்ளது எனப் பருப்பு இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களைத் தாண்டி பீர் மற்றும் தின்பண்டங்கள் போன்ற பிரிவுகளின் பொருட்களின் விலையும் அதிகரிக்க உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications