பெண்கள் முன்னேற்றத்தில் அதிகப்படியான கவனம் செலுத்தும் மாநிலமாக தமிழ்நாடு, நாட்டிலேயே தனித்து விளங்குகிறது. இந்த நிலையில் தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயை மகளிர் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டத்தில் முக்கியமான மாற்றம் கொண்ட வர உள்ளது முக.ஸ்டாலின் அரசு.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்ப தலைவிக்கும் புதிய நிதி பலத்தை கொடுத்துள்ளது.

இதுவரை 1.62 கோடி பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் இந்தத் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த புதிய முடிவின் மூலம் தமிழகத்தில் உள்ள பெண்களின் பொருளாதார நிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தமிழக அரசின் பெண்களின் நலன் சார்ந்த முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தை முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. இந்த நிதியுதவி திட்டம் பெண்களின் சுய உதவித் திறனை அதிகரித்து, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும். மேலும், குடும்ப வருமானத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்து, குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கு நிதி உதவி பெற முடியும். இது பெண்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி, சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும். இலவச பஸ் வசதி மூலம் தற்போது அதிகப்படியான பெண்கள் வேலைக்கு செல்ல துவங்கியது மூலம் தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு குறியீட்டில் பெண்களின் பங்கீடு அதிகரித்துள்ளது.
இந்த புதிய மாற்றம் குறித்து பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என கருத்துக்கள் நிலவுகிறது. திமுக கட்சியின் தேர்தலில் வெற்றி பெற்று சில மாதங்களுக்கு முன்பு தான் இத்திட்டத்தை செயல்முறைக்கு கொண்டு வந்தது.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இத்திட்டம் சில குறிப்பிட்ட தகுதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலான பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. பின்னாளில் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 1.62 கோடி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வீதிம் வருடத்திற்கு 12000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜனவரி 2025 முதல் அனைத்து குடும்ப தலைவிக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications