இந்த பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி அமையாது என்ற சந்தேகத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை மிகவும் எச்சரிக்கையாகச் செய்து வந்தனர். ஆனால் எக்சிட் போல் முடிவுகள் மொத்த கதையையும் மாற்றியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் FII-களின் கடுமையான ஷார்ட் கவரிங் காரணமாக, நிஃப்டி சுமார் 3% அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை சென்செக்ஸ் 2,778 புள்ளிகள் வரை உயர்ந்தது, இதனால் ஏற்கனவே பங்குகளை வாங்கி அதிகப்படியான லாபத்தை எட்ட துவங்கும் வேளையில் அதை விற்பனை செய்தும் உள்ளனர்.

எக்சிட் போல் கணிப்புகளின் படி NDA க்கு மகத்தான வெற்றியைக் கணித்து பங்குச் சந்தையை அதகளப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பமான பொதுத்துறை நிறுவனங்கள் தான் இன்றைய வர்த்தகத்தின் சூப்பர் ஸ்டாராக உள்ளது. இந்தியப் பங்குச்சந்தை முழுவதும் மோடியின் 3.0 ஆட்சியை மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அனைத்து துறைவாரியான குறியீடுகளும் லாபத்தில் திளைத்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் வாலடைல் இன்டெக்ஸ் இந்தியா குறியீடான VIX 20 சதவீதத்திற்குச் சரிந்துள்ளது.
12 எக்சிட் போல் கருத்துக்கணிப்புகளின் சராசரியின்படி, BJP தலைமையிலான NDA கூட்டணி இந்த முறை 367 இடங்களை வென்று 2019 தேர்தலில் அதன் 353 எண்ணிக்கையை விஞ்சும் எனக் கூறப்படுகிறது. இந்த எக்சிட் போல்-களில் மிகக் குறைந்த கணிப்பு கூட 316 இடங்கள் தான். இதன் எதிரொலியாக நிஃப்டி இந்த வாரம் 24,000 ஐ தாண்டி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எதில் முதலீடு செய்யலாம் எனப் பிரபல ப்ரோகரேஜ் நிறுவனங்கள் பட்டியலிட்டு உள்ளது.
மோதிலால் ஓஸ்வால்: எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி, நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளையில் மோதிலால் ஓஸ்வால் வருவாய் வளர்ச்சி அடிப்படையில் உள்நாட்டு வர்த்தக சூழ்நிலைகள் உடன் சீரமைக்கப்பட்டு தங்களுடைய போர்ட்ஃபோலியோவை மறுசீரமைப்பு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நிதி துறை, நுகர்வோர் துறை, தொழில்துறை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் நாங்கள் அதிக மதிப்பீடு அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. தொழில்துறைகள், நுகர்வோர், ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஆகியவை எங்களின் விருப்பமான முதலீட்டு தீம் என அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மோதிலால் ஓஸ்வால்-ன் முக்கிய முதலீட்டு தேர்வுகளின் பட்டியல் இதோ.
Top Picks: ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, எல்&டி, கோல் இந்தியா, எம்&எம், அதானி போர்ட்ஸ், ஏபிபி, ஹெச்பிசிஎல், ஹிண்டால்கோ, இந்தியன் ஹோட்டல்கள், கோத்ரெஜ் பிராப்பர்டீஸ், குளோபல் ஹெல்த், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ், பிஎன்பி ஹவுசிங், செலோ வேர்ல்ட் மற்றும் கிர்லோஸ்கர் ஆயில்.
CLSA: பொதுத்துறை நிறுவனத்தில் ONGC, NTPC, NHPC, SBI, Power Finance, IGL மற்றும் Mahanagar Gas. பொதுத்துறை அல்லாத மோடி பங்குகளில், அசோக் லேலண்ட், அல்ட்ராடெக், எல்&டி, பார்தி ஏர்டெல், இண்டஸ் டவர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பங்குகள் ஆகியவற்றை CLSA முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
நோமுரா: எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஜிசிபிஎல், எம்&எம், பிஹெச்இஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை இந்தியாவில் எங்கள் சிறந்த தேர்வுகள். மிட்கேப்-களில், நாங்கள் ஃபெடரல் பேங்க், வோல்டாஸ், லுபின், மெட்பிளஸ், இன்ஃபோஎட்ஜ் மற்றும் யூனோ மைண்டா போன்றவற்றை விரும்புகிறோம்.
ஆக்சிஸ் கேப்பிடல்: எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, ஆர்இசி, என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி, சுஸ்லான், ஆர்விஎன்எல், ஜே குமார் இன்ஃப்ரா மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆகியவை தரகு நிறுவனங்களின் சிறந்த தேர்வுகள்.
ஷேர்கான்: ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எம்&எம், எஸ்கார்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எல்&டி, பிஎன்சி இன்ஃப்ராடெக், அதானி போர்ட்ஸ், ஏபிபி, சீமென்ஸ், தெர்மாக்ஸ், கம்மின்ஸ், கிர்லோஸ்கர் இன்ஜின்கள், பிஹெச்இஎல், எச்ஏஎல், பெல், மஸ்கான் டாக், யுடெக், கொச்சின் , ஜேகே லக்ஷ்மி சிமெண்ட், எஸ்பிஐ, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பிஎன்பி, டிஎல்எஃப், சன்டெக் ரியாலிட்டி, அரவிந்த் ஸ்மார்ட்ஸ்பேஸ், பிபிசிஎல், எச்பிசிஎல், கோல் இந்தியா, என்டிபிசி, பிஎஃப்சி.
பிலிப் கேபிடல்: SBI, BOB, கனரா வங்கி, PFC, REC, ஸ்ரீராம் பைனான்ஸ், Muthoot Finance, அல்ட்ராடெக், Siemens, ஹீரோ மோட்டோகார்ப், TVS Motor, Divi's Labs, Syngene, APL Apollo, Jindal SAW, IGL, Aarti Industries, Praj Organics, கோகல்தாஸ் ஏற்றுமதி, எஸ்பி ஆடை.
பிரபுதாஸ் லில்லாதேர்: எல்&டி, அதானி போர்ட், சீமென்ஸ், ஏபிபி, கார்போரண்டம், ஷ்னீடர், எசாப், இங்கர்சால் ராண்ட், கிர்லோஸ்கர் நியூமேடிக், எச்ஏஎல், பெல், பிடிஎல், பிஇஎம்எல், மசாகன் டாக், கொச்சின் ஷிப்யார்ட், அல்ட்ராடெக், அம்புஜா சிமென்ட், வில்சன், வாட்டரீ, L&T, Praj Industries, JSPL, JSL, SBI, BoB, கனரா வங்கி, யூனியன் வங்கி, PNB, பாலிகேப், RR கேபல், டிக்சன், ஆம்பர், கெய்ன்ஸ் மற்றும் சிர்மா.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications