மத்திய அரசு, 2005 பண சலவையை தடுக்கும் விதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு மூலம் இனி 50000 ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு பணம் அனுப்புவோர் விபரங்கள் சேமிக்கப்படும் என தெரிவித்துள்ளது மத்திய அரசு.
தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை தடுக்கும் விதமாக சர்வதேச நிதி பரிமாற்றங்களை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு 2005 பண சலவையை தடுக்கும் விதிகளில் 50000 ரூபாய்க்கு அதிகமாக நிதி பரிமாற்றம் செய்யும் அனைத்தும் பரிமாற்றங்களின் தரவுகளை சேமித்து வைக்க உள்ளது.

இதன் மூலம் 50000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நிதி பரிமாற்றமும் மத்திய அரசின் தீவிர கண்காணிப்பில் வர உள்ளது. இப்புதிய கட்டுப்பாடு கீழ் வெளிநாட்டு நிதி பிரமாற்றத்தை மேற்கொள்ளும் அமைப்பு பணத்தை அனுப்பும் நபர், அவரது அடையாள அட்டை விபரம், எதற்காக பணம் அனுப்பப்படுகிறது என்பது போன்ற முக்கியமான தரவுகளை சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது மத்திய அரசு.
இதேபோல் வெளிநாட்டு நிதி பரிமாற்றம் குறித்து சேகரிக்கப்படும் தரவுகளை நிதி பிரமாற்றத்தை மேற்கொள்ளும் அமைப்புகள் மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும், தகவல் கசிவுகளை ஒருபோதும் அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.

ஏற்கனவே மத்திய அரசின் வேண்டுகோள்-க்கு இணங்க இந்திய ரிசர்வ் வங்கி வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் இந்திய மக்களின் கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கு 20 சதவீத ஆதாரத்தில் இருந்து வரி வசூல் (TCS) செய்யும் விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பணத்தையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதேபோல் உள்நாட்டு டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் அதிகரித்த பின்பு மத்திய அரசு, ஆர்பிஐ, வங்கி அமைப்புகள் எளிதாக கண்காணிக்க முடிகிறது.


Click it and Unblock the Notifications