இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சேவை துறையை அதிகளவில் நம்பியிருக்கும் நிலையில், சீனா போல் இந்தியாவும் ஏற்றுமதி அடிப்படையிலான வர்த்தகச் சந்தையை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு பல ஆண்டுகளாக அறிவித்து வருகிறது.
இதேபோல் கடந்த சில வருடங்களில் சீனாவில் இருந்து வெளியேறிய பல நிறுவனங்களை அண்டை நாடுகளுக்குச் சென்றாலும், குறிப்பிடத்தக்க அளவிலான நிறுவனங்களை இந்தியா ஈர்த்துள்ளது. இதேபோல் இந்தியாவில் இருக்கும் பல நிறுவனங்கள் புதிய உற்பத்தி தளத்தை உருவாக்கியுள்ளது.
இதனால் இந்தியாவில் உற்பத்தி அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஏற்றுமதி அளவும் அதிகரித்து வருகிறது.
ஏற்றுமதி
இந்தியாவின் ஏற்றுமதி அளவு பிப்ரவரி மாதம் 22.36 சதவீதம் அதிகரித்துச் சுமார் 33.81 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் இன்ஜினியரிங், பெட்ரோலியம், கெமிக்கல் ஆகியவை டாப் 3 இடத்தைப் பிடித்துள்ளது.
தொடர் உயர்வு
இந்தியாவின் மொத்த ஏற்றுமதி அளவு ஏப்ரல் 2021ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 2021ல் ஏற்றுமதி அளவு 195.7 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து 69.35%, 48%, 49%, 45%, 22%, என ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 20 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இறக்குமதி
இந்தியாவில் ஏற்றுமதி ஒருபக்கம் பெரிய அளவில் அதிகரித்தாலும் இறக்குமதியும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்தியாவின் மொத்த இறக்குமதி அளவு 34.9 சதவீதம் அதிகரித்து 55 பில்லியன் டாலராக உள்ளது.
கச்சா எண்ணெய்
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மட்டும் 66.56 சதவீதம் அதிகரித்து மொத்த இறக்குமதி அளவில் 15 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 13.12 பில்லியன் டாலார உயர்ந்துள்ளது.
தங்கம் இறக்குமதி
தற்போது கொரோனா தொற்றின் 3வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இவ்விரண்டின் இறக்குமதி அதிகரிப்புக்கு ரஷ்யா - உக்ரைன் போரும் முக்கியக் காரணமாக உள்ளது.
மோடி அரசின் கனவு
மோடி அரசின் கனவை நினைவாக்கும் வகையில் ஏற்றுமதி அளவு தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி தான், ஆனால் வர்த்தகம் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரிப்பது நாணய மதிப்பு மற்றும் நிதி நிலையைப் பாதிக்கும். இந்தியாவின் ஏற்றுமதி அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதன் வாயிலாக இந்த ஆண்டு 400 பில்லியன் டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications