விவசாயிகளுக்குத் தனி ஆதார் அட்டையா..? மத்திய அரசின் Farmer ID பற்றி தெரியுமா..?

இந்தியாவில் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆதார் அட்டை போன்ற தனித்துவமான 'விவசாயி ID' என்னும் புதிய அடையாள எண் பெறுவார்கள், இதை ஆறு கோடி விவசாயிகள் 2024-25 இல் பெறப்போகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஆதார் இருக்கும் போது விவசாயிகளுக்கு மட்டும் எதற்காக இந்த Farmer ID கொண்டு வருகிறது..? இதில் அப்படி என்ன இருக்கப்போகிறது என்பது தான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உருவாக்கிப் பராமரிக்கும் இந்த Farmer ID-யில் நில பதிவுகள், விவசாயிகள் வைத்திருக்கும் கால்நடைகள் எண்ணிக்கை, விதைக்கப்பட்ட பயிர்கள் மற்றும் பெறப்பட்ட அரசு நலன்கள் உள்ளிட்ட விவசாயிகளுடன் தொடர்புடைய பல்வேறு தரவுகள் இதில் மொத்தமாக இணைக்கப்படும்.

விவசாயிகளுக்குத் தனி ஆதார் அட்டையா..? மத்திய அரசின் Farmer ID பற்றி தெரியுமா..?


விவசாயிகள் தொடர்புடைய தகவல்கள் மொத்தமாக இதில் இணைக்கப்படும் காரணத்தால், இது நம்பகமான டிஜிட்டல் அடையாளமாகச் செயல்படும், இதன் மூலம் விவசாயிகளுக்கான சேவைகள் மற்றும் திட்டங்கள் வழங்குவதை மத்திய மாநில அரசுகள் ஒழுங்கு முறைப்படுத்த முடியும்.

மத்திய மாநில அரசு இணைந்து Farmer ID-ஐ விவசாயிகளுக்கான சென்டரலைஸ்டு டிஜிட்டல் பப்ளிக் இன்பாரஸ்டக்சராக (DPI) ஆக வடிவமைக்கப்பட்டு, மத்திய அரசின் கனவுத் திட்டமான அக்ரிஸ்டாக்-ன் முக்கிய அம்சமாக இருக்கப் போகிறது. மேலும் இதில் பயிர் கடன் மற்றும் பயிர் காப்பீட்டு விபரங்களும் சேர்க்கப்படும்.

அக்ரிஸ்டாக் கட்டமைப்பு Farmer ID தவிர, விவசாயிகளுக்குச் சொந்தமான நில வரைபடங்கள் மற்றும் பயிர்கள் விதைக்கப்பட்ட பதிவேடு (டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு) ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

Digital Agriculture Mission கீழ், மத்திய அரசு ஏற்கனவே 11 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அடையாளங்கள் - Kisan Ki Pehchaan - ஐ உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆறு கோடி விவசாயிகளுக்கு இதைக் கூடுதலாகப் பெறுவார்கள், மூன்று கோடி விவசாயிகள் 2025-26 மற்றும் மீதமுள்ள இரண்டு கோடி விவசாயிகள் 2026-27 இல் பெறுவார்கள்.

இத்திட்டத்தின் சோதனை திட்டம் ஆறு மாநிலங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஆறு மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் (ஃபர்க்காபாத்), குஜராத் (காந்திநகர்), மகாராஷ்டிரா (பீட்), ஹரியானா (யமுனா நகர்), பஞ்சாப் (பதேகர் சாஹிப்) மற்றும் தமிழ்நாடு (விருதுநகர்) ஆகியவை அடங்கும். இதற்கிடையில், 19 மாநிலங்கள் அக்ரிஸ்டாக் செயல்படுத்துவதற்காக வேளாண்மை அமைச்சகத்துடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+