இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த பரிந்துரைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு மக்காச்சோளம் மற்றும் எரிபொருள் போன்ற முக்கியமான பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிக் குறைப்பு அறிவிப்புகள் பிப்ரவரி மாத பணவீக்கத் தரவு வெளியான பிறகுதான் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
விலைவாசி உயர்வு
இந்தியாவில் கொரோனாவுக்குப் பின்பு உணவு பொருட்கள் முதல் கட்டுமான பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இதேவேளையில் மக்களின் வருமானம் பெரிய அளவில் உயராத காரணத்தால் மக்கள் கையில் இருப்பு குறைந்து டிமாண்ட்-ம் குறைந்து வருகிறது.
பணவீக்கம்
இதற்கிடையில் வட்டி விகித உயர்வாலும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வாலும் இந்தியாவின் வருடாந்திர சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.72 சதவீதமாக இருந்து ஜனவரியில் 6.52% ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் பாதிப்பு
பணவீக்க உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு முக்கியப் பொருட்கள் மீதான வரியை குறைத்து தளர்வுகளை அளிக்கும் திட்டத்தில் உள்ளது.
உணவு பணவீக்கம்
உணவு பணவீக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் பால், மக்காச்சோளம் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வு பணவீக்க கவலைகளை அதிகரித்துள்ளது. இதனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும் மற்றும் மத்திய அரசும் ஆலோசனை செய்து வருவதாக மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம்
மக்காச்சோளம் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. தற்போது மக்காச்சோளம் சுமார் 60% அடிப்படை வரியை பெற்று வருகிறது, அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரிகளும் மீண்டும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்
கடந்த சில மாதங்களில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் அதிகளவில் தளர்த்தப்பட்டு நிலையாக இருந்தாலும், எரிபொருள் நிறுவனங்கள் குறைந்த இறக்குமதி செலவுகளை மட்டுமே சந்தித்தாலும், முந்தைய இழப்புகளை ஈடுசெய்ய விலையைக் குறைக்காமல் தொடர்ந்து விலையைக் குறைக்காமல் உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில் இன்றைய கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மத்திய அரசு வரிகளைக் குறைப்பது விலையை நிர்ணயம் செய்தால். கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறைவான விலைக்குப் பெட்ரோல் பங்க் ஆபரேட்டர்களுக்கு அளிக்க முடியும் இதன் மூலம் மக்களுக்கு எரிபொருள் செலவுகள் குறைந்து பணவீக்கத்தைக் குறைக்க முடியும்.
சில்லறை பணவீக்கம்
ஜனவரி மாத சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச இலக்கு வரம்பான 6% ஐ விட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் பிப்ரவரி மாத துவக்கத்தில் இந்தியாவில் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மத்திய வங்கியன் வட்டி விகித உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பை குறைக்க ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.


Click it and Unblock the Notifications