மத்திய அரசு தனது ஜிஎஸ்டி வரி அமைப்பு வலையை விரிவாக்கம் செய்ய மாம் அண்ட் பாப் கடைகளில் சிறு பிரிவுகளை மட்டும் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
இதன் மூலம் அரசு வரி அமைப்புகள் கூடுதலாக வர்த்தக அமைப்புகள் வர உள்ளது.
சரி மாம் அண்ட் பாப் ஸ்டோர்ஸ் என்றால் என்ன என்ற குழப்பம் பலருக்கு வரலாம் நம்ம ஊரில் இருக்கும் மளிகைக் கடைகள், சிறிய ஹோட்டல், சிறிய வர்த்தக அமைப்புகள் தான். மேலும் இந்த மாம் அண்ட் பாப் ஸ்டோர்ஸ் ஒரே குடும்பத்தால் இயக்கக் கூடிய சிறிய வர்த்தக அமைப்புகள்.
இந்திய பொருளாதாரம்
இந்திய பொருளாதாரத்தில் பெருமளவு வகைப்படுத்தாத பொருளாதாரம் தான், இந்த நிலையில் வகைப்படுத்தாத துறையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை வரி அமைப்பிற்குள் கொண்டு வரும் பொருட்டு மத்திய அரசு மாம் அண்ட் பாப் ஸ்டோர்ஸ் பிரிவில் சில முக்கியமான பிரிவை மட்டும் தற்போது வரி அமைப்பின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு வருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி
இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் இருக்கும் வேளையில் வருடத்தில் 40 லட்சம் வரையில் விற்றுமுதல் கொண்ட அனைத்து வர்த்தக அமைப்புகளும் ஜிஎஸ்டி வரியின் கீழ் பதிவு செய்யப்பட்டு வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விவேக் ஜோஹ்ரி
இந்த நிலையில் மத்திய மறைமுக மற்றும் சுங்க வரி அமைப்பின் சேர்மன் ஆக இருக்கும் விவேக் ஜோஹ்ரி, நாங்கள் சில பிரிவில் துறைவாரியான அணுகுமுறையைச் செயல்படுத்த உள்ளோம். அதாவது சந்தை அளவை ஒப்பிடுகையில் வரி செலுத்துவோரின் அடிப்படை அளவீடு மிகவும் குறைவாக இருக்கும் இடத்தில் இத்தகையை அணுகுமுறையைக் கையில் எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டம் தீட்டல்
இதேவேளையில் மத்திய அரசு, மாநில அரசுகள் உடன் இணைந்து ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தகவலை சேர்த்து புதிய திட்டத்தைத் தீட்ட தயாராகி வருகிறது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்த 2017ல் ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சமாக இருந்தது ஜனவரி 2023ல் இது 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.
B2C பிரிவில்
மேலும் விவேக் ஜோஹ்ரி B2C பிரிவில் தனியார் தரவு, மாநில அரசு மற்றும் பிற அரசு அமைப்புகளின் தரவுகளைத் திரட்டி ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளது. இதன் அடிப்படையில் மத்திய மறைமுக மற்றும் சுங்க வரித் துறை வருமான வரி செலுத்துவோர் தரவுகள், சொத்து வரித் தரவுகள், வர்த்தக நிறுவனங்களின் தரவுகள் என வரி வசூலிக்கப்பட்டும் அனைத்து தரவுகளையும் இணைத்து ஆய்வு செய்து புதிய strategy-ஐ உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக விவேக் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பட்ஜெட்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பட்ஜெட் அறிக்கையில் வெளியிட்ட சில முக்கியமான தனிநபர் வருமான வரிச் சலுகைகள் அளித்தது மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்ட நிலையில் இதை ஈடுசெய்ய மத்திய அரசு தனது வரி வருவாயை ஈடு செய்யப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தான் இந்த ஜிஎஸ்டி வரி விரிவாக்கத்தை செய்யத் தனிப்பட்ட பிரிவை டார்கெட் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications