இந்தியாவில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக அனைத்து விற்பனைகளிலும் வாடிக்கையாளர்கள் பில்களைக் கேட்கும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 'மேரா பில் மேரா அதிகார்' திட்டத்தை தொடங்க உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு காலாண்டிற்கும் தலா ரூ.1 கோடி வீதம் இரண்டு பம்பர் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் 1 முதல் 12 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் தொடங்கப்படும்.

ஒவ்வொரு மாதமும், 800 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஜிஎஸ்டி பில்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தலா ரூ.10,000 மதிப்புள்ள பரிசு வழங்கப்பட உள்ளது, இதோடு மற்றொரு பிரிவில் தலா 10 பேருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பம்பர் பரிசாக, காலாண்டு அடிப்படையில் அப்லோடு செய்யப்பட்ட ஜிஎஸ்டி பில்களில் குலுக்கல் செய்யப்பட்டு ஒவ்வொரு காலாண்டிற்கும் தலா ரூ.1 கோடி வீதம் இரண்டு பம்பர் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த பரிசு அனைத்தும் மக்கள் அனைத்து பொருட்களை வாங்கும்போது அதற்கான பில் கேட்டு பெற வேண்டும் என்பது தான்.
முதல்கட்டமாக அசாம், குஜராத், ஹரியானா மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்கள் பிரிவில் புதுச்சேரி, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய பகுதிகளிலும் 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம் தொடங்கப்படும்.
ஒவ்வொரு மாதம் 5 ஆம் தேதிக்குள் பதிவேற்றப்பட்ட முந்தைய மாதத்தில் வழங்கப்பட்ட அனைத்து B2C பில்களும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதிபெறும். இந்த கால அளவீட்டில் தான் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 'மேரா பில் மேரா அதிகார்' திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்வாய்ஸ் அதாவது பில் பதிவேற்றும் போது, குலுக்கல் போட்டியில் பங்கேற்பவர்கள் சப்ளையர்-ன் GSTIN எண், பில் எண், பில் தேதி, பில் மதிப்பு மற்றும் வாடிக்கையாளரின் மாநிலம்/UT ஆகியவற்றை வழங்க வேண்டும்.
மேலும் குலுக்கலில் வெற்றி பெறுபவர்கள், பான் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற சில கூடுதல் தகவல்களை ஆப் அல்லது இணையத்தளத்தின் மூலம் அப்லோடு செய்ய வேண்டும். வெற்றியாளர்கள் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த தகவல்கள் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார், இதனால் வெற்றிபெறும் தொகையை மாற்ற முடியும்.
GST பதிவு செய்யப்பட்ட அனைத்து சப்ளையர் வழங்கிய பில்களும் இந்த சிறப்பு குலுக்குக்கு தகுதி பெறும் ஆனால், ஆனால் குறைந்தபட்ச பில் மதிப்பு ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு மாதத்தில் அதிகபட்சம் 25 இன்வாய்ஸ்களை ஒருவர் பதிவேற்றலாம். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் கிடைக்கும் 'மேரா பில் மேரா அதிகார்' என்ற மொபைல் செயலியிலும், 'web.merabill.gst.gov.in' என்ற இணைய போர்ட்டலிலும் இன்வாய்ஸ்களை பதிவேற்றலாம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications