மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காலை திட்டமிட்டப்படி 11 மணிக்கு துவங்கியது. இந்த கூட்டம், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்கள் நீடிக்கும் என்பதால் இக்கூட்டத்தின் இறுதியில் என்னவெல்லாம் மாற்ற செய்யப்படப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள மக்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
மோடி அறிவித்த தீபாவளி பரிசு-ல் என்ன இருக்கும்?
பிரதமர் மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக சதந்திர தினத்தன்று தெரிவித்தார். இதை ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படும் அளவுக்கு பெரும் மாற்றங்களை கொண்டு இருக்கும் என கணிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்ட்டத்தில் தினசரி பயன்பாட்டு பொருட்கள் முதல் வாகனங்கள் வரை பல்வேறு பொருட்களின் வரி விகிதங்களை குறைக்கும் பெரிய மாற்றத்தை விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாற்றம், பொதுமக்களின் செலவை குறைக்க உதவும், தொழில்களுக்கு புதிய வளர்ச்சி வாய்ப்புகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறையும் காரணத்தால் மக்கள் கூடுதலான பொருட்களை வாங்குவார்கள் இதானல் வர்த்தகம் மட்டும் அல்லாமல் உற்பத்தி, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி கூட்டத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய மாற்றங்கள்:
இந்த கூட்டத்தில், தினசரி பயன்பாட்டு பொருட்களான நெய், பருப்பு வகைகள், 20 லிட்டர் குடிநீர், கார்பனேடெட் இல்லாத பானங்கள், ஸ்னாக்ஸ் - நம்கீன், காலணிகள் மற்றும் உடைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்றவை தற்போதைய 12 சதவீத விகிதத்திலிருந்து 5 சதவீத விகிதத்திற்கு மாற்றப்படலாம்.
மேலும், பென்சில், சைக்கிள், குடை மற்றும் ஹேர் பின்கள் போன்ற பொதுவாக பயன்படும் பொருட்களும் 5 சதவீத விகிதத்திற்கு கொண்டுவரப்படலாம். இந்த மாற்றங்கள், சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழும் மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
விமான காப்பீடு கட்டணங்கள் தற்போதைய 18 சதவீத விகிதத்திலிருந்து 5 சதவீதமாக அல்லது பூஜ்ய சதவீதமாக (0 சதவீதம்) குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன, இது ஒரு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
அதேபோல், தற்போது 28 சதவீத விகிதத்தில் உள்ள சில டிவி, வாஷிங் மெஷின் மற்றும் ஃபிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் 18 சதவீத விகிதத்திற்கு குறைக்கப்படலாம். இந்த மாற்றங்கள், பொதுமக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தி, இத்துறையின் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
வாகனங்களுக்கு தற்போது 28 சதவீத விகிதம் மற்றும் இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் சிறு கார்களுக்கு 18 சதவீத விகிதம் விதிக்கப்படலாம், அதே நேரம் SUVக்கள் மற்றும் விலை உயர்ந்த கார்களுக்கு சிறப்பு 40 சதவீத விகிதம் விதிக்கப்படலாம்.
மேலும் புகையிலை, பான் மசாலா மற்றும் சிகரெட்களைப் போன்று மக்களுக்கு தீங்கு பொருட்களுக்கும் 40 சதவீத சிறப்பு விகிதம் விதிக்கப்படலாம், அல்லது 40 சதவீதத்திற்கும் அதிகமான வரி சேர்க்கப்படலாம்.
இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள், பொதுமக்களுக்கு விலை நிவாரணம் அளித்து, தொழில்களுக்கு புதிய வளர்ச்சி பாதையை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மாற்றங்களால் ஏற்படும் வருவாய் தாக்கங்களை சமாளிக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும் 8 மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வைத்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications