தேர்தல் முடிவுகள் ஒவ்வொரு நிமிடமும் எக்சிட் போல்களை நொறுக்கி வரும் வேளையில், எக்சிட் போல்களை நம்பி முதலீடு செய்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகிறார்கள்,
குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எக்சிட் போல்-களை மட்டுமே நம்பி திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெரும் தொகையை முதலீடு செய்து ஷார்ட் கவரிங் செய்தனர், ஆனால் தற்போது அனைத்தும் வீணாகிவிடவே, தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று காலை வர்த்தகம் 2000 புள்ளிகள் சரிவில் துவங்கி 6100 புள்ளிகள் வரையில் சரிந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் நம்பிய மோடி ஸ்டாக்ஸ் பட்டியலில் அதிகப்படியான பங்குகள் இருக்கும் நிஃப்டி PSE குறியீடு 14 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தது.
முதலீட்டுச் சந்தை சற்றும் எதிர்பார்க்காத வகையில் பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோடி தலைமையிலான NDA கூட்டணி 295 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் வேளையில், காங்கிரஸ் NDA கூட்டணிக்கு பெரும் போட்டியாக 227 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது எக்ஸிட் போல் முடிவுகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் வேளையில் முதலீட்டுச் சந்தையில் இது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது.
மேலும் நிஃப்டி 8.2% குறைந்தது, சென்செக்ஸ் 8% குறைந்தது, வங்கி நிஃப்டி 9.2% குறைந்தது, FINNIFTY 9.2% குறைந்தது, MIDCPNIFT 10.2% குறைந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு மத்தியம் 1.15 மணிக்குள் ரூ.45.56 லட்சம் கோடி குறைந்து வெறும் ரூ.380.35 லட்சம் கோடியாக இருந்தது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 426 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் வாயிலாக BHEL, REC, PFC மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பங்குகள் 15 சதவீதம் சரிவைக் கண்டது மூலம், இப்பங்குகள் மீதான வர்த்தகத்தில் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஒரு பங்குகள் லோவர் சர்கியூட் அளவீட்டை எட்டும் போது அதன் வர்த்தகத்திற்குத் தற்காலிக நிறுத்தம் செய்யப்படும். இதன் மூலம் முதலீட்டாளர்களின் பெரும் இழப்பு காப்பாற்றப்படும்.
இந்த பங்குகள் அவற்றின் லோவர் சர்க்யூட் பிரேக்கர் வரம்பை அடைந்தது, இதனால் வர்த்தக நடவடிக்கைகளில் ஆட்டோமேட்டிங் செயல் முறை மூலம் வர்த்தகத்திற்குத் தற்காலிக தடை ஏற்பட்டு உள்ளது.
BHEL, REC, PFC மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்குகளைத் தொடர்ந்து SAIL, GAIL, Coal India, Power Grid, ONGC, Container Corporation of India மற்றும் Hindustan Aeronautics பங்குகள் தலா 10 சதவீதம் சரிந்தது லோவர் சர்க்யூட் பிரேக்கர் வரம்பை அடைந்தது ஆட்டோமேட்டிங் செயல் முறை மூலம் வர்த்தகத்திற்குத் தற்காலிக தடை ஏற்பட்டு உள்ளது. நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 7 சதவீதம் சரிந்தன.
மேலும் நிஃப்டி 8.2% குறைந்தது, சென்செக்ஸ் 8% குறைந்தது, வங்கி நிஃப்டி 9.2% குறைந்தது, FINNIFTY 9.2% குறைந்தது, MIDCPNIFT 10.2% குறைந்தது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு மத்தியம் 1.15 மணிக்குள் ரூ.45.56 லட்சம் கோடி குறைந்து வெறும் ரூ.380.35 லட்சம் கோடியாக இருந்தது. திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 426 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications