இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது மக்களின் நுகர்வு அளவீட்டை அதிகம் நம்பியுள்ளது பலருக்கும் தெரியாது. மக்கள்தொகை அதிகமாக கொண்ட நாடுகளில் உள்நாட்டு நுகர்வு மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். இப்படியிருக்கையில் ஜிஎஸ்டி வரி செய்யப்பட்ட மறுசீரமைப்பும், வரி குறைப்பும் உள்நாட்டு நகர்வு அளவை உயர்த்துவது மட்டும் அல்லாமல் டிரம்ப் விதித்த வரி தாக்கத்தை முழுமையாக களைந்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.
கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தனியார் நுகர்வு பங்கீடு மட்டும் 61.4 சதவீதமாகும். இந்த நிலையில், புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் நாட்டின் நகர்வு அதிகரிப்பது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நிபுணர்களின் கணிப்பின் படி ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 0.5 சதவீத வரை அதிகரிக்கும் என எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் வரி தாக்கத்தை முழுமையாக சமாளிக்கும் திறன் கொண்டதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதேபோல் இந்த வரி குறைப்பு மூலம் உருவாரும் நுகர்வு குறுகியகால அளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டாலும், நீண்ட கால அடிப்படையில் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இந்திய சந்தையில் நுகர்வு மற்றும் வணிக செயல்பாடுகளை ஊக்குவிக்கும், வரி குறைப்பு மூலம் மக்கள் கையில் கூடுதல் நிதி கிடைக்கும் காரணத்தால் பொதுமக்களின் கொள்முதல் திறன் அதிகரிக்கும், புதிய வர்த்தக வாய்ப்புகள் தோன்றும்.
ஆனால் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில், அனைத்து பொருட்களும் இந்த நன்மையை அனுபவிக்காது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் புகையிலை, கட்கா, பிற புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்கள் தற்போதைய 28 சதவீத வரி தொடரும், மேலும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஈடு செய்ய பெறப்பட்ட கடன்கள் முழுமையாக தீர்க்கப்படும் வரை இழப்பீட்டு செஸ் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications