தங்கம், வெள்ளி வாங்கப் போறீங்களா..? வெயிட் பண்ணுங்க.. விலை குறையப்போகுது..?

சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்வதால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறுகிய காலத்தில் மேலும் சரியக்கூடும் என்று மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (MOFSL) நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் நவ்நீத் தமானி தெரிவித்துள்ளார்.

தங்கம், வெள்ளி விலை சரிவுக்கான காரணம் என்ன?: இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த 8 முதல் 10 மாதங்களில் தங்கம் சுமார் 60 சதவீதமும், வெள்ளி கிட்டத்தட்ட 80 சதவீதமும் என வருமானத்தை அளித்துள்ளன. இவ்வளவு வலுவான உயர்வுக்கு பிறகு, தற்போது ஏற்பட்டுள்ள விலை திருத்தம் முக்கியமாக குறுகிய கால லாபப் பதிவின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தங்கம், வெள்ளி வாங்கப் போறீங்களா..? வெயிட் பண்ணுங்க.. விலை குறையப்போகுது..?

எனினும், ஒட்டுமொத்தப் பொருளாதார அடிப்படைகளில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இரண்டு உலோகங்களுக்கான விநியோக சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. இரண்டிற்கும் தேவை இன்னும் வலுவாகவே உள்ளது, மேலும், மத்திய வங்கிகள் தொடர்ந்து வாங்குபவர்களாகவே இருக்கின்றனர். இப்போது நாம் பார்ப்பது அதிகப்படியான விலையேற்றத்திற்கு பிறகு சந்தை சற்று ஓய்வெடுக்கும் ஒரு செயல்முறை மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டாலரில் இருந்து 4,400 டாலராகவும், வெள்ளியின் விலை 45 டாலரில் இருந்து 55 டாலராகவும் சமீபத்தில் உயர்ந்தது, இது சந்தையில் ஏற்பட்ட அதிகப்படியான உற்சாகத்தை குறிக்கிறது. அந்த உற்சாகம் இப்போது உறிஞ்சப்படுகிறது. விலைகள் சமநிலை நிலைக்கு திரும்புகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் எவ்வளவு குறையும்..?: தற்போதைய நிலையில் இருந்து இரண்டு உலோகங்களும் மேலும் 5 முதல் 6 சதவீதம் வரை சரியக்கூடும் என்று நவ்நீத் தமானி கூறியுள்ளார். அதாவது, ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 3,838.50 டாலர் என்ற நிலைக்குச் சரியலாம். வெள்ளி ஒரு அவுன்ஸ் 44.5 டாலர் முதல் 45 டாலர் வரை குறையலாம். மேலும், சமீபத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பதால், உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை சர்வதேச விலையை விட அதிகமாகவே குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

உள்நாட்டுச் சந்தை நிலவரங்களைப் பொறுத்தவரை, தற்போது கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.1,45,000 என்ற அளவில் வர்த்தகமாகும் வெள்ளி, ரூ.1,36,000 முதல் ரூ.1,38,000 வரை குறைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தங்கத்தைப் பொறுத்தவரை, 10 கிராமுக்கு ரூ.1,12,000 முதல் ரூ.1,15,000 (தற்போதைய விலையை விட சுமார் ரூ.6,000 முதல் ரூ.7,000 குறைவு) என்ற விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+