நாட்டில் கொரோனா காலத்தில் நிலவி வந்த நெருக்கடியான நிலையில், மனிதர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளவே போராடி வந்தனர். ஆனால் இதனை இன்னும் மோசமாக்கும் வேலையிழப்புகளும் அந்த சமயத்தில் லட்சக்கணக்கில் அதிகரித்தன.
ஆனால் தற்போது நிலைமையே வேறு. கடந்த ஜூன் மாதத்தில் பணியமர்த்தல் அதிகரித்து வருவதாக பல்வேறு தரவுகளும் சுட்டிக் காட்டி வருகின்றன.
இது சமீபத்தில் வெளியான நாக்குரி தரவு, கடந்த மே மாதத்தினை காட்டிலும், ஜூன் மாதத்தில் பணியமர்த்தலானது 15% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் இப்படி பணியமர்த்தும் துறைகளில் ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகள் முன்னணியில் உள்ளதாகவும் கூறியது. இது குறித்து https://tamil.goodreturns.in/news/india-s-hiring-activity-up-15-in-last-june-024224.htmlஎன்ற கட்டுரையிலேயே படித்தோம்.
பணியமர்த்தல் அதிகரிப்பு
இதற்கிடையில் தற்போது மான்ஸ்டெர் இன்டெக்ஸ், கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த பணியமர்த்தலானது கடந்த ஜூன் 2020ஐ காட்டிலும், நடப்பு ஆண்டில் 7% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 6% அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.
செம வளர்ச்சி
குறிப்பாக கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் 4% வளர்ச்சியினை கண்டது. இதே ஒட்டுமொத்த துறையிலும் பார்க்கும்போது கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் 7% வளர்ச்சி கண்டுள்ளது எனவும் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் இது வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
மாஸ் காட்டிய தொலைத் தொடர்பு துறை
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் மாதத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் போடப்பட்டிருந்த லாக்டவுன் நடவடிக்கைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தொலைத் தொடர்பு துறை/ ISP துறையானது கடந்த ஆண்டினை காட்டிலும் 39% அளவில் குறிப்பிட்டதக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளன. இதே சாப்ட்வேர் ஹார்டுவேர் துறையில் 32% வளர்ச்சியும், லாகிஸ்டிக்ஸ் மற்றும் கூரியர், சரக்கு/போக்குவரத்து 29% வளர்ச்சியும் கண்டுள்ளன.
சென்னையில் என்ன நிலவரம்
இதே நகர வாரியாக பார்க்கும்போது இந்த பணியமர்த்தல் நடவடிக்கையானது பெங்களூரில் 50%மும், புனேவில் 28%மும், ஹைத்ராபாத்தில் 22%மும், சென்னையில் 22% பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக அனைத்து துறைகளிலுமே இந்த பணியமர்த்தலானது மே மாதத்தினை காட்டிலும் நேர்மறையான வளர்ச்சியினை காட்டியுள்ளன.
துறை வாரியாக என்ன நிலவரம்?
குறிப்பாக ஏற்றுமதி /இறக்குமதி 25%ம், உற்பத்தி துறையில் 14%மும், கப்பல் மற்றும் கடல் துறையில் 11மும், ஹெல்த்கேர் துறை, பயோ டெக்னாலஜி & லைஃப் சயின்ஸ், பார்மா உள்ளிட்ட சில துறைகல் 10% வளர்ச்சியினை கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது கண்டுள்ளன. குறிப்பாக ஐடி மற்றும் ஐடி சார்ந்த துறைகளில் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், ஆண்டுக்கு ஆண்டு பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு
இந்தியாவின் முறையான வேலைவாய்ப்பு சந்தை வலுவடைந்து வருவதாகவும், பணியமர்த்தல் என்பது அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசின் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகள், வளர்ச்சிக்கு இன்னும் உந்துதலாக அமையலாம்.


Click it and Unblock the Notifications