பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமடைந்து இருக்கின்றன. பூமியின் துணைக்கோளான நிலாவில் பல்வேறு நாடுகளும் தங்களுடைய விண்கலன்களை அனுப்பி ஆய்வு நடத்தி இருக்கின்றன.
நிலாவிலேயே பல்வேறு பகுதிகளை இன்னும் நம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் நிலாவுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் நிலாவில் தங்கும் இடங்களை கட்டமைக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த ஜிஆர்யு ஸ்பேஸ் என்ற நிறுவனம்.

இதனை அடுத்து மனிதர்களை நிலாவுக்கு சுற்றுலா அழைத்து செல்ல இருப்பதாக கூறியிருக்கிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என இந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. நிலாவுக்கு சுற்றுலா சென்று வருவதற்கும் நிலாவில் தங்களின் ஹோட்டலில் தங்குவதற்கும் எவ்வளவு கட்டணம் என்பதற்கான தகவல்களையும் இந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து நிலாவில் தங்குவது மற்றும் சுற்றுலா சென்று வருவதற்கான முன்பதிவுகளை தொடங்கி இருக்கிறது. பூமியை தாண்டி வேறொரு இடத்தில் மனிதர்கள் தங்குவதற்கான முதல் தங்குமிடம் தங்களுடைய நிலா ஹோட்டல் இருக்கும் என இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. பூமியை தாண்டி மனிதர்கள் வாழ்க்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த திட்டத்தை தொடங்குகிறோம் என கூறியிருக்கிறது.
இதன்படி நிலாவில் இவர்கள் கட்டமைக்கும் ஹோட்டலில் சென்று தங்குவதற்கு 2.2 கோடி ரூபாயிலிருந்து 9 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுமாம். பூமியில் இருந்து நிலாவுக்கு சென்று ஹோட்டலில் தங்கிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பி வருவதற்கு 90 கோடி ரூபாய் வரை கட்டணம் ஆகும் என இந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. தங்களுடைய இந்த திட்டத்தின் கீழ் நிலாவுக்கு சுற்றுலா சென்று வர விரும்பக்கூடிய நபர்கள் ஆயிரம் டாலர்களை விண்ணப்ப கட்டணமாக செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என கூறி இருக்கிறது.
இவ்வாறு விண்ணப்பம் செய்யக் கூடிய நபர்கள் விண்ணப்பங்கள் மிக தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறது. குறிப்பாக அவர்களுடைய நிதி மட்டுமில்லாமல் மருத்துவ தகவல்களையும் நாங்கள் பரிசோதனை செய்வோம் இங்கிருந்து நிலாவிற்கு பயணம் செய்வதற்கு ஏதுவாக உடல தகுதி கொண்டிருக்கிறார்களா என்பதையும் நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என தெரிவித்திருக்கிறது.
2025 ஆம் ஆண்டு 22 வயதான ஸ்கைலர் சான் என்ற நபர் ஜிஆர்யு ஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கினார். இவர் இதற்கு முன்பு எலான் மஸ்கின் டெஸ்லாவில் வேலை பார்த்தவர். 2029ஆம் ஆண்டில் தங்களுடைய கட்டுமானப் பணி நிலவில் தொடங்கும் என தெரிவிக்கும் இந்த நிறுவனம் 2032 ஆம் ஆண்டில் சுற்றுலா தொடங்கும் என கூறியிருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications