உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயில் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்தில் உள்ளன. 2024 ஜனவரியில் கும்பாபிஷேகத்துடன் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் இதுதவிர, அயோத்தியில் ரூ.30,923 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை யோகி அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் அயோத்தி, வரலாற்றின் மிகப்பெரிய மாற்றத்தின் சாட்சியாக அமைய உள்ளது.

அயோத்தி மாவட்ட கலெக்டர் நிதிஷ் குமார் பேட்டி ஒன்றில், தற்போது அயோத்தியில் மொத்தம் ரூ.30,923 கோடி மதிப்பிலான 200க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அயோத்தியை உலகின மிக அழகான நகரமாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட அனைத்து திட்டங்களையும் 2024ம் ஆண்டுக்குள் நிறைவடைவதை உறுதி செய்ய நாங்கள் 24 மணி நேரமும் உழைத்து வருகிறோம்.
மரியாதா புர்ஷோத்தம் ஸ்ரீராம் சர்வதேச விமான நிலையத்தின் டெவல்ப்மென்ட் மிக முக்கியமானது. இந்த விமான நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்குள் பணிகள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில் 60 பயணிகள் அமரும் திறன் கொண்ட சிறிய விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும். 2025ல் விமான நிலையத்தின் இறுதி கட்டம் முடிந்ததும் அது போயிங் விமானங்கள் இறங்கும் வகையில் தயாராக இருக்கும். சுமார் ரூ.620 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் அயோத்தி ரயில் நிலைய புதுப்பிக்கும் பணிகள் அயோத்தியின் வளர்ச்சிக்கான மற்றொரு முக்கியமான திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையம் விரிவாக்கத்தை உறுதி செய்வது மட்டுமின்றி அதனை அழகுப்படுத்துதல் மற்றும் பயணிகள் வசதிகளை அறிமுகம் செய்வதும் அடங்கும். பயணிகள் முனைய கட்டிடத்தின் வெளிப்புற முகப்பு ராமர் கோயிலை போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டது.
ராமர் கோயிலுக்கு செல்லும் சாலைகளை விரிவுப்படுத்துவதற்காக மாநில அரசு ரூ.797 கோடி ஒதுக்கியுள்ளது. கட்டுமானம் மற்றும் விரிவாக்க பணிகளுக்காக 3 பாதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 3 பாதை பணிகளும் வரும் ஜனவரிக்குள் முடிவடையும்.
இதனால் நெரிசலான பாதைகள், பைலேன்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் இனி ராமர் கோயில் செல்லும் பாதைகளுக்கு இடையூறாக இருக்காது. பழை ஆசிரமங்கள், புராதன குளங்கள், கோயில்கள் உள்பட முழு நகரத்தையும் அழகுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.68.80 கோடி செலவில் மாநில சுற்றுலா துறை மேற்கொண்டு புனரமைப்பு பணிகளுக்கு இது போன்ற 37 வழிபாட்டு தலங்களை தேர்வு செய்துள்ளோம்.
ராமர் கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள புராதன சூரியன் கோயிலின் சூரிய குளம் புதுப்பிக்கும் பணிகளை அயோத்தி நிர்வாகம் ஏற்கனவே முடித்து விட்டது. பாரத் குளமும் அதே மாதிரியில் மேம்படுத்தப்படும். பெரும்பாலான தி்ட்டங்கள் டிசம்பருக்குள் முடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
தீபாவளிக்கு முன்பு அயோத்தியில் நடைபெற்ற தீப விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றுகையில், அயோத்தி ராமருக்கு மிகவும் பிடித்த நகரம். அதை உலகின் மிக அழகான நகரமாக உருவாக்க இரட்ட என்ஜின் அரசு உறுதியாக இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் 2023 டிசம்பர் 31க்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications