பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்து வருவதால், ப்ளூசிப் பங்குகள் உள்பட பல முன்னணி நிறுவன பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளன. இந்த சூழ்நிலையில், தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்பான தனது மதிப்பீட்டை வெளியிட்டதையடுத்து, நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 1 சதவீதம் உயர்ந்தது. ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம், பேட்டரி ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளதை மோர்கன் ஸ்டான்லி குறிப்பிட்டுள்ளது.
தரகு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு தொடர்ந்து "overweight"ஆக உள்ளது என்றும், இப்பங்கின் இலக்கு விலையை ரூ.1,606ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. அதாவது இப்பங்கு கடந்த புதன்கிழமை வர்த்தக முடிவு அளவை காட்டிலும் 30 சதவீதம் உயருவதற்கு சாத்தியம் உள்ளது என்பதை இது குறிப்பிடுகிறது. கடந்த புதன்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.1,226.95ஆக இருந்தது.

"overweight" பங்கு என்பது, ஆய்வாளர்கள் முதலீட்டாளர்கள் அதிகமாக வாங்க பரிந்துரைக்கும் ஒரு பங்காகும். ஏனென்றால் அந்த பங்கு அதன் பிரிவில் உள்ள மற்ற பங்குகளை விட அல்லது ஒரு அளவுகோலை விட சிறப்பாக செயல்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பற்றிய தகவல்களை வழங்கும் 38 ஆய்வாளர்களில், 34 பேர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கை வாங்கலாம் தெரிவித்துள்ளனர். அதேசமயம் 3 ஆய்வாளர்கள் விற்பனை செய்யலாம் என்று கணித்துள்ளனர். ஒருவர் பங்கை தக்கவைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 0.36 சதவீதம் உயர்ந்து ரூ.1,237.45ஆக இருந்தது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தகவல் தொடர்பு முதல் எரிபொருள் வரையிலான பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் பேட்டரி தயாரிப்பிலும் களம் இறங்குகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்துக்கு சொந்தமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம், பேட்டரி ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமான பிஎல்ஐ திட்டத்தின்கீழ், இந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பேட்டரி லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் 10 Gwh திறன் கொண்ட பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்குவதுடன், பேட்டரிகளுக்கான நவீன ரசாயன செல்களை தயாரிக்க உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications