ஈரான் போர் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ராணுவ தாக்குதலை தொடங்கின, பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் போரால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது கச்சா எண்ணெய் விலை உயர்வால் அமெரிக்க டாலர் வலுவடைந்து முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து டாலர் மற்றும் கச்சா எண்ணெயை நோக்கி சென்றுவிட்டனர். இதனால் தான் போர் சூழலுக்கு மத்தியிலும் தங்கம் விலை குறைந்தது.

இந்நிலையில் இன்று காலையில் குறைந்த தங்கம் விலை இன்று மாலை திடீரென உயர்ந்து விட்டது. அதுக்கு என்ன காரணம் நாளைய தினம் தங்கத்தின் விலை என்ன ஆகும் என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்துகொள்ளலாம். நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்று காலை 340 ரூபாய் விலை குறைந்து 13,000 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் உயர்ந்த விட்டது. சென்னையில் தற்போது ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,04,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில் அது 1,06,000 ரூபாயாக விலை உயர்ந்திருக்கிறது. அதாவது இன்று காலை உடன் ஒப்பிடும்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 2000 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியும் விலையும் மாற்றம் அடைந்து இருக்கிறது. நேற்று 250 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி இன்று காலை 10 ரூபாய் விலை குறைந்து 240 ரூபாயாக மாறியது. தற்போது மீண்டும் 10 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 ,50,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இன்று காலை சரிவடைந்து தங்கம், வெள்ளி விலை மாலையில் திடீரென உயர்ந்ததற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. இவை தான் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை போக்கை நிர்ணயம் செய்யப் போகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் ஐந்து நாட்கள் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாகவும் நேற்று கூறினார். இதனை ஈரான் மறுத்திருந்தது.
இந்த சூழலில் இன்றைய தினம் ஈரானின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அயத்துல்லா அலி கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என கூறியதாக அல் அரேபியா ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி வெளியான உடனேயே உலக அளவில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
குறிப்பாக இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. அதாவது ஈரான் போர் ஒரு முடிவை நோக்கி செல்வதற்கான சாதகமான அறிகுறிகள் தென்பட்டு இருப்பதால் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை கச்சா எண்ணெயில் இருந்து எடுத்து பங்குச் சந்தைகளிலும், தங்கத்திலும் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர் இதுதான் தங்கம் வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.
இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தை நோக்கி நகர்கிறது என்றால் வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை குறையும் , பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை உயரும். ஒருவேளை அதற்கு மாறாக தாக்குதல் தீவிரமடைகிறது கச்சா எண்ணெய் விலை உயரும் , பங்குச் சந்தைகளும் , தங்கம் விலையும் குறையும். நாளைய தினம் தங்கம் வெள்ளி விலை என்ன ஆகப்போகிறது என்பது அமெரிக்கா அதிபர் டிரம்பும், ஈரான் நாட்டு அரசும் இன்று நள்ளிரவுக்குள் எடுக்க போகும் முடிவுகளே தீர்மானிக்கும்.
இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் 10 கிராம் தங்கம் விலை 140800 ரூபாய் என விலை உயர்ந்தது, இது காலை வர்த்தகம் தொடங்கும் போது 1,38,411 ரூபாயாக தான் இருந்தது. வர்த்தகம் முடியும் போது தங்கம் விலை உயர்ந்திருந்தது. அதே போல ஸ்பாட் கோல்டு விலையும் ஒரு அவுன்ஸ் 5 டாலர் உயர்ந்து 4,409 டாலராக இருக்கிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications