2025 ஆம் ஆண்டில் தங்கத்தை பின்னுக்கு தள்ளி அதிக லாபம் தந்த ஒரு உலோகமாக மாறியது வெள்ளி. ஒரே ஆண்டில் வெள்ளியின் விலை 160 சதவீதம் உயர்ந்து 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்தது.
2026ஆம் ஆண்டிலும் வெள்ளியின் ஆட்டம் தொடரும் என்கிறது மோதிலால் ஓஸ்வால் நிறுவனம். வெள்ளியின் விலை உயர்வு இத்துடன் இன்று விடாது என தெரிவித்திருக்கிறது. வெள்ளி விலை உயர்வுக்கான ஒரு தொடக்கத்தை தான் நாம் பார்த்திருக்கிறோம் கூடிய விரைவில் அது பல மடங்கு விலை உயர போகிறது என குறிப்பிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கிலோ வெள்ளியின் விலை 90,000 ரூபாய் அதுவே டிசம்பர் மாத இறுதியில் 2.5 லட்சம் ரூபாய் கடந்து விட்டது. இதுவரை எந்த ஒரு உலோகமும் இப்படி குறுகிய காலத்தில் இவ்வளவு பிரமாண்டமான வளர்ச்சி அடைந்தது கிடையாது என தெரிவித்திருக்கிறது.

வெள்ளியின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்களையும் முன் வைத்து இருக்கிறது. குறிப்பாக தொழில்துறை தேவை, வெள்ளி தொழில் ரீதியாக பல்வேறு பொருட்கள் உற்பத்திக்கும் முக்கியமான ஒரு உலோகமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரிக்க செய்து விலை உயர்வுக்கு காரணமாக அமைந்தது என்கிறது மோதிலால் ஓஸ்வால்.
சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள் என இனி வரும் நாட்களிலும் பல்வேறு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் அதிக கவனம் செலுத்தும். இவ்வாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து உபகரணங்களிலும் வெள்ளியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. எனவே நீண்ட கால அடிப்படையில் வெள்ளியின் விலை உயரும் என தெரிவிக்கிறது
அதேபோல வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்த அளவுக்கு வெள்ளியை தோண்டி எடுத்து அதனை நாம் பயன்படுத்த கூடிய உலோகமாக மாற்றுவது என்பது உயரவில்லை. அதாவது வெள்ளிக்கான டிமாண்ட் அதிகரித்த அளவிற்கான சப்ளை அதிகரிக்கவில்லை என கூறுகிறது. பூமியிலிருந்து நாம் இன்னும் அதிக வெள்ளியை தோண்டி எடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த டிமாண்ட் சப்ளையும் சமமாகி வெள்ளியின் விலை நிலை பெறும் எனக் கூறுகிறது.
ஆனால் தற்போதைக்கு அதற்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. ஏராளமான மக்கள் வெள்ளி ஈடிஎஃப் திட்டங்களில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சில்வர் ஈடிஎஃப் திட்டங்களில் மேலாண்மை செய்யப்படும் நிதிகளின் மதிப்பு கடந்த ஆண்டில் 150 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. அப்படி என்றால் வெள்ளி விலை உயரும் என கருதி ஏராளமானவர்கள் அதில் முதலீடு செய்கிறார்கள் இதுவும் ஒரு வகையில் வெள்ளி டிமாண்ட்டை அதிகரிக்க செய்கிறது என தெரிவித்திருக்கிறது.
2026 ஆம் ஆண்டில் முதல் அரையாண்டில் வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்று தெரிவிக்கிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை 320 ரூபாய் என்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 3.20 லட்சம் ரூபாய் என்ற அளவையும் எட்டும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இருந்தாலும் வெள்ளி உடனடியாக உச்சத்தை தொட்டு உடனடியாக சரிவே காணக்கூடிய ஒரு முதலீடு என்பதை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications