தங்கம் விலை கடந்த ஓராண்டு காலத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை கண்டுவிட்டது. அதுவும் குறுகிய ஆறு மாத காலத்திலேயே உலக சந்தையிலும் சரி இந்தியாவிலும் சரி தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. இது யாருமே எதிர்பார்க்காத ஒரு விலை உயர்வு. குறிப்பாக கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கத்தின் விலை உயர்வு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி தான்.
ஏதாவது ஒரு மேஜிக் நடந்து தங்கத்தின் விலை குறைந்து விடாதா என சாமானிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு தவறு என்கிறது மோத்லால் ஓஸ்வால் தரகு நிறுவனம். தங்கத்தின் விலை நிலவரம் தொடர்பாக மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல்வேறு முக்கியமான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக வரும் காலத்தில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கும் என்ற விவரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முன்னணி தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் , தங்கத்தில் ஏற்பட்டிருக்கும் விலை உயர்வு ஒரு தற்காலிக மாற்றம் கிடையாது என தெரிவிக்கிறது. அதாவது இது ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் என குறிப்பிடுகிறது. தற்காலிக மாற்றம் என்றால் தங்கம் விலை ஏறும் அதே வேகத்திலேயே இறங்கும். ஆனால் தங்கம் விலை பெருமளவு ஏறி இருக்கிறது அது இறங்கும் வேகத்தை பாருங்கள் மிகக் குறைவாக தான் இருக்கிறது. எனவே இது ஒரு கட்டமைப்பு ரீதியான மாற்றம் எனக் கூறுகிறது.
உலகம் எங்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையே சமூகமற்ற உறவுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மோதல், ரஷ்யா உக்ரைன் மோதல், ரஷ்யாவுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையிலான பகை, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கக்கூடிய மறைமுக மோதல் உள்ளிட்ட அனைத்தும் தீர்வு காணப்படாமலேயே இருக்கின்றன என கூறுகிறது.
டிரம்ப் பல்வேறு நாடுகளின் மீது வர்த்தக மோதலை கொடுத்தார் எதிரி நாடுகளுக்கு பொருளாதார தடைகளை விதித்தார். இது போன்ற பொருளாதார நிலையற்ற சூழல்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என்ற மனநிலை உலக நாடுகளுக்கு வந்துவிட்டது. எனவே அவை டாலர் அளவை குறைத்து விட்டு தங்கள் கையிருப்பில் தங்கத்தை அதிகமாக வாங்கி சேமிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக தங்கச்சந்தையில் வழக்கத்தை விட அதிகமாக மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குகின்றன. இதனால் தங்க விற்பனை சந்தையே கட்டமைப்பு ரீதியாக மாறி இருக்கிறது என கூறுகிறது.
இதனால் தான் உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5000 டாலர் என்ற விலையை எட்டி விட்டு அதன் பிறகு பெரிய அளவில் சரியவில்லை என கூறுகிறது மோதிலால் ஓஸ்வால். நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான ஒரு முதலீடு என்ற நிலையிலிருந்து நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பான முதலீடு என்ற நிலைக்கு மாறி இருக்கிறது. எனவே இனிவரும் நாட்களிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என கூறியுள்ளது.
பொதுமக்களாகட்டும் , மத்திய வங்கிகளாகட்டும் , பெரிய பெரிய முதலீட்டாளர்கள் ஆகட்டும் தங்கத்தை அவர்கள் என்னவாக பார்க்கிறார்கள் என்ற பார்வையே கட்டமைப்பு ரீதியாகவே மாறுபட்டு இருக்கிறது என்பதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வில் தான் இருக்கும் என தெரிவிக்கிறது. பொதுமக்கள் தங்கம் விலை உயர்கிறது , குறைகிறது என்பதை பார்க்காமல் தங்கள் கைகளில் பணம் சேரும் போது தங்களால் இயன்ற வரையில் தங்கத்தில் முதலீடு செய்தோ அல்லது தங்கத்தை வாங்கி வைப்பதோ தான் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.தங்கம் விலை ஏறுவது ஒரு சிறிய கால மாற்றமல்ல உலக பொருளாதாரத்தின் அடிப்படை மாற்றங்களால் இது நடக்கிறது இது வரும் நாட்களில் இன்னும் தங்கத்தின் விலையை வலுவடைய தான் செய்யும் எனக் சுட்டிக்காட்டுகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!



Click it and Unblock the Notifications